ads

வெளியானது கேம் ஓவர் திரைப்படத்தின் பிரத்தியேக டீசர்

கேம் ஓவர் டீசர்

கேம் ஓவர் டீசர்

கடந்த 2015 ஆம் ஆண்டு நமது லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவின் நடிபில் வெளியானது சூப்பர் ஹிட் த்ரில்லர் மற்றும் ஹாரர் படமான மாயா. இந்த படத்தை எழுதி இயக்கி இருந்தார் படத்தை இயக்கியவர் திரு.அஸ்வின் சரவணன் அவர்கள். முதல் படத்திலேயே தமிழ் சினிமா ரசிகர்களின் மனதில் இடம்பிடித்து பேசப்பட்டார், தற்பொழுது கேம் ஓவர் என்ற திகில் படத்தை வெற்றிகரமாக இயக்கி முடித்துள்ளார். முதல் படத்தில் நயன்தாராவை இயக்கியவர், இந்தப் படத்தில் நடிகை டாப்ஸியை இயக்கியுள்ளார்.

இறுதிச் சுற்று, விக்ரம் வேதா, தமிழ் படம்-2 ஆகிய படங்களைத் தயாரித்த ஒய் நாட் ஸ்டூடியோஸ் எனும்

தயாரிப்பு நிறுவனம் இந்த படத்தையும் தயாரித்துள்ளது. இசையமைப்பாளர் ரோன் எத்தன் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார். தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் படமாகத் தயாராகியுள்ள இப்படத்தை பிரபல பாலிவுட் இயக்குநர் திரு.அனுராக் காஷ்யப் விநியோகம் செய்யவுள்ளார். இயக்குனர் அனுராக் காஷ்யப் நயன்தாரா, விஜய் சேதுபதி, ராஷி கண்ணா மற்றும் அதர்வா ஆகியோர் இணைந்து நடித்த இமைக்கா நொடிகள் படத்தில் வில்லனாக நடித்தது குறிப்பிடத்தக்கது.

சரியாக 90 களில் பிரபலமாக இருந்த சிப் வீடியோ கேம்களை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்ட இந்தப் படத்தை த்ரில்லராக உருவாக்கியிருக்கிறார் இயக்குனர் அஸ்வின் சரவணன் அவர்கள். இந்த படத்தை பற்றி இயக்குனர் அஸ்வின் சரவணன் கூறுகையில். ஒரு வீட்டுக்குள் நடக்கும் திரில்லர் கதை இது. படத்தின் 70 சதவிகிதக் காட்சிகளில் டாப்ஸி வீல் சேரில் வருகிற மாதிரி காட்சிகள் இருக்கும். தமிழ், தெலுங்கு பைலிங்க்குவல் படமாக தயாராகவுள்ளது. டாப்ஸி தற்போது இந்தியில் பிரபலமாக உள்ளதால் ஹிந்தியில் எடுக்க பேசி வருகிறோம் எனத் தெரிவித்திருந்தார்.

அஸ்வின் சரவணன், எஸ்.ஜே சூர்யா நடிப்பில் இறவாக்காலம் என்ற படத்தை இயக்கியுள்ளார். நீண்ட நாட்களாக இப்படம் தயாரிப்பில் உள்ளது குறிப்பிடத்தக்கது. ஆனால் இந்த இறவாக்காலம் படம் எப்போது வெளியாகும் என்ற தகவல்கள் இன்னும் வெளியாகவில்லை.

வெளியானது கேம் ஓவர் திரைப்படத்தின் பிரத்தியேக டீசர்