வால்டர் ஐந்து வருட போராட்டத்திற்கு பின் உருவான திரைப்படம், சிபி சத்யராஜ்

வால்டர் சிபி சத்யராஜ்





வால்டர் படம், இந்த வாரம் மார்ச் 13ஆம் தேதி ரிலீஸ் ஆக உள்ளது, இந்த செய்திகள் தான் நமக்கு தெரியும். ஆனால் இந்த வால்டர் படம் உருவாவதற்கு எடுத்துக்கொண்ட காலம் ஐந்து வருடம் என்பது மிகுந்த ஆச்சர்யமாக தெரிந்தது.


வால்டர் படத்தின் ஃபிரீ ரிலீஸ் பிரஸ் மீட் நிகழ்ச்சியில் நடிகர் சிபி சத்யராஜ் தெரிவித்தது, ஐந்து வருடத்திற்கு முன் வால்டர் படத்தின் கதையை இயக்குனர் அன்பு தன்னிடம் கூறி பின் அதற்கு வடிவம் கொடுத்து, தகுந்த தயாரிப்பாளர் கிடைக்கும் வரை காத்திருந்து பின்னர் இந்த கதையை படமாக்குவதற்கு இயக்குனர் அன்பு பட்ட கஷ்டங்கள் அதிகம் என தெரிவித்தார்.

வால்டர் தமிழ் படம் (2020) எந்த மாதிரியான படம்


மேலும் வால்டர் படத்திற்கு அமைந்த தயாரிப்பாளர் பல வகைகளில் இந்த படம் நல்ல முறையில் உருவாவதற்கு உதவியதை பற்றியும், படத்தில் வேலை செய்த அனைத்து தொழில்நுட்ப வல்லுநர்கள் மற்றும் ஒளிப்பதிவாளர் மற்றும் நடிகருமான நட்டி நடராஜன் வால்டர் படத்தில் இணைந்த பின் படத்திற்கு இன்னும் அதிக வலிமை கூடியதாக தெரிவித்தார் வால்டர் படத்தின் நாயகன் சிபி சத்யராஜ் தெரிவித்துள்ளார்.

Latest Post