வால்டர் படம் எப்படி இருக்கு, வால்டர் திரை விமர்சனம்


வால்டர் படம் எப்படி இருக்கு, வால்டர் திரை விமர்சனம்: கேரளாவில் திரையரங்குகள் அனைத்தும் முடிய நிலையில் தமிழ் திரையுலக தயாரிப்பாளர்கள் மற்றும் நடிகர்கள் பலர் ஒரு வித அச்சத்தில் இருந்தனர், தமிழக அரசும் கேரளா அரசை போல் அறிவித்தால், நிலைமை வேறு மாதிரி ஆகிவிடும். ஆனால் இன்று திட்டமிட்ட படி, தமிழகத்தில் அனைத்து படங்களும் ரிலீஸ் ஆகின.
அவ்வாறு ரிலீஸ் ஆன படங்களில் வால்டர் படமும் ஒன்று. சத்யராஜின் மகன் சிபிராஜ் போலீஸ் அதிகாரியாக இந்த படத்தில் நடித்துள்ளார் மற்றும் இவருக்கு ஜோடியாக ஷிரின் காஞ்ச்வாலா நடித்துள்ளார். சமுத்திரக்கனி மற்றும் நட்டி நடராஜன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
படத்தின் முதல் பகுதி மெதுவாக ஆரம்பித்தாலும் கதை போகப்போக விறுவிறுப்பாக செல்கிறது. குழந்தைகளை கடத்துவதும், இதில் ஒளிந்திருக்கும் அதிர்ச்சியான சம்பவங்களும் படத்திற்கு வலுவாக இருக்கிறது. குறைந்தது இதுபோன்ற கதைகள் பல முறை வந்திருந்தாலும், இது புதிய முயற்சியே.
படத்தின் இரண்டாம் பகுதி மிக சிறப்பாக இருக்கிறது, காட்சிகள் எங்கும் தொய்வு இல்லை. சமுத்திரக்கனி மற்றும் நட்டி நடராஜன் கதைக்கு மிக பெரிய பலம். வால்டர் வெற்றிவேல் படம் நடிகர் சத்யராஜ்க்கு எப்படி திருப்புமுனையாக இருந்ததோ, வால்டர் படம்மும் சிபி சத்யராஜ்கு நல்ல திருப்புமுனை படமாக அமையும்.
சிபி சத்யராஜ் சில இடங்களில் சத்யராஜை போலவே முகபாவனைகள் இருக்கிறது, இன்னும் குரலில் ஒரு அழுத்தும் தேவை. காமெடி காட்சிகள் மற்றும் காதல் காட்சிகள் படத்தில் தேவையான அளவிற்கே இருப்பதால், படம் நன்றகவே இருக்கிறது.
வால்டர் படத்தை பொறுத்தவரை, கண்டிப்பாக பெற்றோர்கள் பார்க்கவேண்டிய படம். இது ஒரு சமூக விழிப்புணர்வு படம் என்பதால், அனைவரும் திரையரங்கிற்கு வந்த பார்க்கலாம். தமிழ் ராக்கர்ஸ் போன்ற இணையதளங்களில் பார்ப்பதை தவிர்க்கவும். திரையரங்கிற்கு சென்று பார்க்க முடியவில்லை என்றல் சிறிது நாட்களில் அமேசான் ப்ரைம் பக்கத்தில் பார்க்கலாம்.