ads

விஜய்யின் மாஸ்டர் படம் ஆன்லைனில் லீக், இயக்குனர் லோகேஷ் கனகராஜ் வேண்டுகோள்

விஜய்யின் மாஸ்டர் படம் ஆன்லைனில் லீக்

விஜய்யின் மாஸ்டர் படம் ஆன்லைனில் லீக்

நீண்ட காத்திருப்புக்குப் பிறகு, தளபதி விஜய்யின் ரசிகர்கள் கொண்டாடும் படம் மாஸ்டர், படத்தை பெரிய திரைகளில் பார்க்கத் தயாராக உள்ளனர். இந்த படம் ஜனவரி 13 ஆம் தேதி பொங்கல் பண்டிகைக்காக  பெரிய திரைகளில் உலகம் முழுவதும் ரிலீஸ் ஆகிறது.

இந்நிலையில், நேற்று சமூக வலைத்தளங்களில் மாஸ்டர் படத்தின் லீக் ஆன சில வீடியோக்கள் பகிரப்பட்டது. இதை சற்றும் எதிர்பாராத தயாரிப்பாளர் மற்றும் இயக்குனர் அதிர்ச்சியடைந்தனர்.  மாஸ்டர் படத்தின் வீடியோக்கள் ஆன்லைனில் கசிந்துள்ளன, இதில் விஜய் சேதுபதி மற்றும் விஜய்யின் முக்கிய காட்சிகள் இடம்பெறும் காட்சிகள் கசிந்தது.

விஜய்யின் மாஸ்டர் படம் ஆன்லைனில் லீக், இயக்குனர் லோகேஷ் கனகராஜ் வேண்டுகோள்

மாஸ்டர் முழு படத்தை இணையத்தில் கசியவிட்டது யார் என்று தெரியாத இந்த சூழலில், பலர் இதைப் பகிர்ந்துகொண்டிருப்பதால், படத்தின் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் ரசிகர்களிடம் அவற்றைப் பகிர வேண்டாம் என்று கேட்டுக் கொண்டு பொறுமையாக காத்திருக்குமாறு கேட்டுக்கொண்டார்.

மேலும் மாஸ்டர் படத்தின் டைரக்டர் தனது சமூக வலைத்தளத்தில் தெரிவித்தது,  மாஸ்டர் படத்தை உங்களிடம் கொண்டுவருவதற்கு 1.5 வருட காலம் போராடினோம். எங்களிடம் இருப்பது நீங்கள் அதை திரையரங்குகளில் ரசிப்பீர்கள் என்ற நம்பிக்கை மட்டுமே. 

விஜய்யின் மாஸ்டர் படம் ஆன்லைனில் லீக், இயக்குனர் லோகேஷ் கனகராஜ் வேண்டுகோள்

திரைப்படத்திலிருந்து கசிந்த வீடியோக்களை நீங்கள் கண்டால், தயவுசெய்து அதைப் பகிர வேண்டாம் அனைவருக்கும் நன்றி. அனைவரையும் நேசிக்கிறேன். இன்னும் ஒரு நாள் காத்திருங்கள் #மாஸ்டர் உங்களுக்காக பெரிய திரையில் என்று வேண்டி கேட்டுக்கொண்டார். 

இதுபோன்ற கசியும் மாஸ்டர் படத்தின் பாதிப்புகள் நீங்கள் பார்த்தால் பகிர வேண்டாம் என்று #Master பட குழு  அனைவரையும் தாழ்ந்த பணிவுடன் கேட்டுக்கொள்கிறோம். லீக் ஆன வீடியோ பற்றி தெரிவிக்க  report@blockxpiracy.com என்ற மின்னஞ்சல் முகவிரிக்கு தெரிவிக்கும்படி கேட்டுக்கொண்டனர்.

விஜய்யின் மாஸ்டர் படம் ஆன்லைனில் லீக், இயக்குனர் லோகேஷ் கனகராஜ் வேண்டுகோள்

விஜய்யின் மாஸ்டர் படம் ஆன்லைனில் லீக், இயக்குனர் லோகேஷ் கனகராஜ் வேண்டுகோள்