ads

கமலின் வேட்டையாடு விளையாடு 2, உறுதி செய்தார் இயக்குனர் கௌதம் மேனன்

வேட்டையாடு விளையாடு 2

வேட்டையாடு விளையாடு 2

ஸ்டைலான திரைப்படத் இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன் இப்போது தமிழ் மற்றும் மலையாளத் திரைப்படங்களில் தனது நடிப்பு திறனை வெளிப்படுத்த தொடங்கியுள்ளார். இதற்கிடையில், வேட்டையாடு விளையாடு 2 ஆம் பாகத்தை உலகநாயகன் கமல் நடிக்க இருப்பதாக வந்த வதந்திகளை உண்மை என உறுதி செய்தார்  இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன்.

தற்செயலாக நடிகர் கமலுடன் நடந்த ஒரு கலந்துரையாடலில் இதை விவாதித்ததாக இயக்குனர் மனம் திறந்தார். சமீபத்தில், ஷங்கர் இயக்கி கொண்டிருந்த இந்தியன் பாகம் 2 படத்தில் கமல் நடித்துக் கொண்டிருந்தது அனைவருக்கும் தெரிந்த ஒன்று. இந்தியன் 2 படப்பிடிப்பில் நடந்த விபத்தில் உயிர் இழப்பு காரணமாக படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது.

ஆனால் இப்போது உலகின் தொற்றுநோயான கொரோனா வைரஸ் பரவுவதால் அனைத்து படப்பிடிப்புகள் நிறுத்தப்பட்டுள்ளது. மேலும் இந்தியன் 2 தொடங்குவதற்கு ஏற்ற சூழ்நிலை இல்லாததால், 144 தடைக்கு பின் இந்தியன் 2 தொடருமா அல்லது கமல் வேட்டையாடு விளையாடு 2 படத்தில் நடிப்பாரா என்ற அதிகாரப்பூரவ செய்தி வரும்.

கமலின் வேட்டையாடு விளையாடு 2, உறுதி செய்தார் இயக்குனர் கௌதம் மேனன்

வேட்டையாடு விளையாடு படம் 2006 ஆம் ஆண்டு ரிலீஸ் ஆகி மிகப்பெரிய பிளாக்பஸ்டர் ஹிட் திரைப்படமாக அமைந்தது. சைக்கோ திரில்லர் படமான இது, அமெரிக்கா மற்றும் இந்தியாவில் படமாக்கப்பட்டது.

கமல், ஜோதிகா மற்றும் பிரகாஷ் ராஜ் முக்கிய வேடத்தில் நடித்திருந்தனர். மிக பெரிய வெற்றி படமான  வேட்டையாடு விளையாடு படத்தின் இரண்டாம் பாகத்தை ரசிகர்கள் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கிறார்கள் என்பதே உண்மை.

கமலின் வேட்டையாடு விளையாடு 2, உறுதி செய்தார் இயக்குனர் கௌதம் மேனன்