அடுத்த படத்தில் இரண்டு கதாநாயகிகளுடன் காதல் செய்ய உள்ளாரா தளபதி விஜய்?

தளபதி விஜய்









தளபதி விஜய் அவர்களின் பிகில் திரைப்படத்தின் பணிகள் இறுதி கட்டத்தை நெருங்கிய நிலையில் அடுத்த படத்துக்கான தகவல்கள் வெளி வர தொடங்கி உள்ளன. தளபதி தனது பிகில் படப்பிடிப்பின் பணிகள் இந்த முடியும் நிலையில் தீபாவளி வெளியீடாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இரட்டை வேடங்களில் தோன்றும் விஜய் கால்பந்து விளையாட்டை மையமாக கொண்ட கதை மையமாக அமைந்துள்ளது.

பிகில் படத்திற்கு பிறகு இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிக்கவுள்ளார். மாநகரம் கைதி புகழ் லோகேஷ் தளபதி 64 படத்தினையும் இயக்குள்ளார். முற்றிலும் வேறுபட்ட கதைக்களத்துடன் முன்பு தோன்றாத கதாபாத்திரத்தில் தளபதி விஜய் தோன்றுவர். மேலும் தளபதி ரசிகர்களுக்கு விருந்தாக அமையும் என இயக்க வட்டாரம் மூலம் அறியப்படுகின்றது.

இப்படத்தினை தளபதி விஜயின் உறவினர் சேவியர் பிரிட்டோ தயாரிக்க உள்ளார். புதிய படத்தின் இசையமைப்பாளராக அனிருத் ஒப்பந்தம் ஆகியுள்ளார். சத்யன் சூரியன் மற்றும் பிலோமின் ராஜ் முறையே ஒளிப்பதிவாளராகவும், எடிட்டராகவும் பணியாற்றுவார்கள். 


கதையின் படி படத்தில் இரண்டு கதாநாயகிகள் வலம் வருவார்கள் என அறியப்படுகின்றது. கீதா கோவிந்தம் புகழ் ரஷ்மிகா மந்தனா மற்றும் அயோக்யா மற்றும் அடங்க மறு  புகழ் ராஷி கன்னா தேர்தெடுக்க முன்னணியில் இருப்பதாக தெரிகின்றது. இவர்கள் இருவரும் தளபதி விஜயுடன் உறுதியா இணைந்து நடிப்பார்களா என்று பொறுத்திருந்து காண வேண்டும். இன்னும் பட வட்டாரங்களில் இருந்து அதிகாரப்பூர்வமான செய்தி வரதா நிலையில் நம்பகத்தன்மை கொண்டு எதிர்நோக்கி காத்திருக்க வேண்டும். 


Share on:

Latest Post