ads

எதிர்பார்ப்பை மீறிய தளபதி 63 பிகில் முதல் பார்வை: இரு வேறு தோற்றத்தில் அசத்திய விஜய்

பிகில் முதல் பார்வை

பிகில் முதல் பார்வை

தளபதி விஜயின் பிறந்தநாள் கொண்டாட்டங்கள் முன்னரே ஆரம்பித்த நிலையில் இன்று தளபதி 63 படத்தின் முதல் பார்வை வெளியாகி உள்ளது. படத்தின் பெயரும் அதிகாரப்பூர்வமாக வெளியாகி உள்ளது.

இயக்குனர் அட்லீ மற்றும் தளபதி விஜயின் கூட்டணியில் வெளி வர உள்ள மூன்றவது படத்தின் பெயர் பிகில் என்று பெயரிடப்பட்டுள்ளது. போஸ்டரில் நடிகர் விஜய் இரண்டு கதாபாத்திரத்தில் தோற்றம் அளிக்கின்றார். அப்பா - மகன் என இரு வேறு தோற்றங்களில் தோன்றி ரசர்களின் ஆர்வத்தை இன்னும் ஏற்படுத்தி உள்ளனர் படக்குழுவினர்.

எதிர்பார்ப்பை மீறிய தளபதி 63 பிகில் முதல் பார்வை: இரு வேறு தோற்றத்தில் அசத்திய விஜய்

வேஷ்டி அணிந்து வயதான தோற்றம்  கொண்டு லோக்கல் டானகவும், இளமை  கால்பந்து வீரர் தோற்றத்திலும் போஸ்டரில் தோன்றியுள்ளார் தளபதி விஜய். படத்தின் பார்வையில் இருந்து விளையாட்டு சம்மந்தப்பட்ட படம் என்று தெரிகின்றது. படத்திற்க்கான பெயர் கேப்டன் மைக்கேல், வெறித்தனம், அசால்ட், பிகில், மிரட்டல் போன்ற வதந்திகள் வந்த வண்ணம் இருந்தாலும் இன்று பிகில் என்ற பெயர் சூட்டப்பட்டு வெளியிடப்பட்டுள்ளது.

முன்னாள் கால்பந்து வீரர் தனது உள்ளூர் கால்பந்து அணியை எவ்வாறு தேசிய போட்டியில் வெற்றி பெற செய்கின்றார் என்பது ஒரு வரி கதையாக உள்ளது. மைக்கேல், பிகில் என்ற கதாபாத்திரத்தில் தளபதி நடித்துள்ளார். ஏஜெல் என்ற பாத்திரத்தில் நயன்தாரா நடித்துள்ளார். மேலும் ஜாக்கி ஷ்ரோப், விவேக், கதிர், டேனியல் பாலாஜி, இந்துஜா மற்றும் பலர் நடித்துள்ளனர்.

இசை புயல் ரஹ்மான் இசையமைத்துள்ளார். விஷ்ணு ஒளிப்பதிவும், எடிட்டிங் ரூபன் அவர்கள் செய்துள்ளனர். மெர்சல் படத்தில் பணியாற்றிய குழு இப்படத்திலும் பணியாற்றி உள்ளனர்.

படத்தின் இரண்டாவது பார்வை இரவு 12 மணியளவில் வெளியிட உள்ளதாக படக்குழு கூறியுள்ளனர். தளபதி நடித்துள்ள இப்படம் தீபாவளிக்கு வெளியாகும் என எதிர் பார்க்கப்படுகின்றது. 

எதிர்பார்ப்பை மீறிய தளபதி 63 பிகில் முதல் பார்வை: இரு வேறு தோற்றத்தில் அசத்திய விஜய்