ads
தலைவன் தலைவி திரைப்படத்திற்கு மக்களிடையே அதிக எதிர்பார்ப்பு
ராம் குமார் (Author) Published Date : Jul 19, 2025 23:20 ISTபொழுதுபோக்கு
இயக்குனர் பாண்டிராஜ் இயக்கத்தில் ஜூலை 25 - ம் தேதி நடிகர் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி மற்றும் நித்யா மேனன் இணைந்து நடிக்கும் தலைவன் தலைவி திரைப்படம் வெளியாக உள்ளது. இத்திரைப்படத்தில் வரும் பாடல்கள் ரசிகர்களை கவர்ந்துள்ளது இதனால் இத்திரைப்படம் ரசிகர்களிடையே பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதுவரை விஜய் சேதுபதி நடித்து வெளியான குடும்ப படங்கள் வெற்றியடைந்த நிலையில் அதை தொடர்ந்து இத்திரைப்படமும் ஒரு குடும்ப திரைப்படமாக இருப்பதால் இப்படமும் ஒரு வெற்றிப்படமாக அமையும் என மக்களிடையே அதிக எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.
ஏற்கனவே இயக்குனர் பாண்டிராஜ் இயக்கத்தில் வெளியான கடைக்குட்டி சிங்கம் , நம்ம வீட்டு பிள்ளை ஒரு மாபெரும் வெற்றியடைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. நடிகர் விஜய் சேதுபதி கடைசியாக நடித்து வெளியான ஏஸ் திரைப்படம் அவர் நினைத்த அளவிற்க்கு ஒரு வெற்றி படமாக அமையவில்லை ஆனால் அதற்கு முன்னர் அவர் நடித்து வெளியான மகாராஜா திரைப்படம் ஒரு மாபெரும் வெற்றிப்படமாக அமைந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் இவரின் தலைவன் தலைவி திரைப்படம் ஜூலை 25 ல் வெளியாகவுள்ளதால் இத்திரைப்படம் ஒரு குடும்ப வெற்றியை பெறுமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்