ads

தலைவன் தலைவி திரைப்படம் ஆகஸ்ட் 22-ம் தேதி அமேசான் பிரைம் ஓடிடியில் வெளியாகிறது

தலைவன் தலைவி திரைப்படம் ஆகஸ்ட் 22-ம் தேதி அமேசான் பிரைம் ஓடிடியில் வெளியாகிறது

தலைவன் தலைவி திரைப்படம் ஆகஸ்ட் 22-ம் தேதி அமேசான் பிரைம் ஓடிடியில் வெளியாகிறது

நடிகர் விஜய் சேதுபதி மற்றும் தேசிய விருது வென்ற நடிகை நித்யா மேனன் நடிப்பில் கடந்த ஜூலை 25-ம் தேதி வெளியான தலைவன் தலைவி திரைப்படம், ஒரு குடும்ப வெற்றிப் படமாக ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது. தற்போது, இப்படம் வரும் ஆகஸ்ட் 22-ம் தேதி முதல் அமேசான் பிரைம் (Amazon Prime) ஓடிடி தளத்தில் வெளியாகும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இயக்குநர் பாண்டிராஜ் இயக்கியுள்ள இப்படத்திற்கு, சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். ஏற்கனவே இவரது இயக்கத்தில் வெளியான கடைக்குட்டி சிங்கம் மற்றும் நம்ம வீட்டுப் பிள்ளை ஆகிய படங்கள் மாபெரும் வெற்றி பெற்ற நிலையில், அந்த  வரிசையில் தற்போது தலைவன் தலைவி படமும் இணைந்துள்ளது.

இப்படத்தில் விஜய் சேதுபதி மற்றும் நித்யா மேனன் ஆகியோரின் இயல்பான நடிப்பு, ரசிகர்களின் மனதைக் கவர்ந்தது. அதேபோல, நகைச்சுவை நடிகர் யோகிபாபுவின் பங்களிப்பும், படத்தின் வெற்றிக்கு முக்கியக் காரணமாக அமைந்தது குறிப்பிடத்தக்கது.

தலைவன் தலைவி திரைப்படம் ஆகஸ்ட் 22-ம் தேதி அமேசான் பிரைம் ஓடிடியில் வெளியாகிறது