ads

வெளியானது தல அஜித்தின் மிரட்டலான நேர் கொண்ட பார்வை ட்ரைலர்

நேர் கொண்ட பார்வை ட்ரைலர்

நேர் கொண்ட பார்வை ட்ரைலர்

தல அஜித்தின் நடிப்பில் இயக்குனர் எச்.வினோத் இயக்கத்தில் வெளியாகியிருக்கும் நேர் கொண்ட பார்வை படத்தின் ட்ரைலர் கோலிவுட் வட்டாரத்தில் பரப்பாக பார்க்கப்பட்டு வருகிறது. பாலிவுட் படமான பிங்க் படத்தின் அதிகாரபூர்வ ரீமேக்கான நேர் கொண்ட பார்வை படம் ஆகஸ்ட் 10 அன்று உலகெங்கும் வெளியாகவுள்ளது. ரீமேக் படம் என்பதால் படத்திற்கு எதிர்பார்ப்பு குறைவாக காணப்பட்ட நிலையில் இது தல அஜித் படம் என்பதால் ட்ரைலர் வெளியீடு சமயத்தில் எதிர்பார்ப்பு சூடு பிடித்தது.

பெரும் ரசிகர் பட்டாளத்தை கொண்டுள்ள நடிகர் அஜித் இத்தகைய கதைக்களத்தை தேர்வு செய்தது ஆச்சரியமாக பேசப்பட்டு வந்த நிலையில் தற்போது ட்ரைலரை பார்க்கும்போது கண்கட்சிதமாக இவர் இக்கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளது தெரிகிறது. படம் மிகுந்த எதிர்பார்ப்புடன் வெளியாக உள்ளதால் வசூலில் ஒப்பனிங் சாதனை படைக்கும் என்பது உறுதி. ட்ரைலர் சமூகவலைதளங்களில் பரபரப்பாக பகிரப்பட்டு வரும் நிலையில் நேர் கொண்ட பார்வை டேக் ட்விட்டரில் உலகளவில் ட்ரெண்ட் ஆகி அசத்தி வருகின்றனர் தல ரசிகர்கள்.

பல நாட்களாக காத்திருக்கும் ரசிகர்களுக்கு இந்த ட்ரைலர் சரியான அதீனி போட்டுள்ளது என்ற சொல்லலாம். இயக்குனர் எச்.வினோத் கதையில் தமிழ் ரசிகர்களுக்கு ஏற்ப சில மாற்றங்களை கொண்டுவந்துள்ள நிலையில் கதை கரு மற்றும் படத்தின் விறுவிறுப்பு பிங்க் படத்திற்கு நிகராக உள்ளது என்பது ட்ரைலரை கண்டா ரசிகர்களின் கருத்து. யுவன் ஷங்கர் ராஜா எப்போதும் போல பின்னணி ஆசையில் வெறித்தனத்தை வெளிப்படுத்தியுள்ளார். திரையின் விறுவிறுப்புக்கேற்ப இசை பக்கபலமாக அமைந்துள்ளது.

வினோத்தின் முந்தய படங்களான சதுரங்க வேட்டை மற்றும் தீரன் அதிகாரம் ஒன்று படங்களை போல நேர் கொண்ட பார்வையும் பலதரப்பட்ட ரசிகர்களை கவர்ந்து ஹிட் வகிக்கும் என்பது உறுதி. அஜித்தின் மார்க்கெட் மற்றும் இத்தகைய சமூக அக்கறை கொண்ட கதை மற்றும் இளம் திறமை வாய்ந்த இயக்குனர் இணையும்போது முடிவு எப்படி இருக்கும் என்பதை பொறுத்திருந்து பாப்போம்.

வெளியானது தல அஜித்தின் மிரட்டலான நேர் கொண்ட பார்வை ட்ரைலர்