சூர்யா செல்வராகவன் கூட்டணியில் வெளியாகியுள்ள புதிய அரசியல் திரைப்படம் என்ஜிகே. படம் வெளியான சில நேரத்தில் தற்போது முழு திரைப்படமும் தமிழ்ராக்கர்ஸ் இணையத்தில் லீக் ஆகியுள்ளது. பல தாமதத்திற்கு பிறகு வெளியான இப்படம் ஆன்லைனில் லீக் ஆவது பட தயாரிப்பாளர்களை மிகவும் வருத்தத்திற்கு உள்ளாகியுள்ளது. படம் உலகம் முழுவதும் வெளியாகி நல்ல ஓப்பனிங்க்கை பெற்றுள்ளது.
விமர்சனங்கள் சுமாராகவே வந்துள்ள நிலையில் படம் பாக்ஸ் ஆபீஸில் வசூலை ஈட்டுமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்கவேண்டும். மேலும் சூர்யா செல்வா கூட்டணி பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட நிலையில் வார இறுதி நாட்களில் டிக்கெட் நெருக்கடி இருப்பதால் மக்கள் இணையத்தளத்தில் பார்க்கக்கூடும் என்ற அச்சமும் உள்ளது. ஒரு படத்தை மிகவும் சிரமப்பட்டு எடுத்து நீண்ட நாள் உழைப்பிற்கு பிறகு வெளியிடப்படும் நேரத்தில் இதுபோன்ற சில சம்பவங்கள் வேதனை அளிக்கின்றது. செல்வராகவன் நீண்ட இடைவேளைக்கு பிறகு எடுத்த படம் என்பதால் ரசிகர் மற்றும் பொது ஜனம் படத்தை பார்க்கும் ஆர்வத்தில் திரையரங்ககளை நாடி அதிகாலை காட்சி முதல் கண்டு கழிக்கின்றனர்.
படத்தில் சாய் பல்லவி ரகுல் ப்ரீத் சூர்யாவிற்கு ஜோடியாக நடித்துள்ளனர். சூர்யாவுக்கு ஒன்றரை ஆண்டு இடைவேளைக்கு பிறகு வெளியாகும் படம் என்பதால் ரசிகர்கள் ரிலீஸை கொண்டாடி வருகின்றனர். விமர்சனங்கள் உயர்ந்த டிக்கெட் விலை மற்றும் ஆன்லைன் லீக் அனைத்தையும் தாண்டி படம் லாபம் ஈட்டுமா என்பதை காத்திருந்து பார்க்க வேண்டும்.
படம் ஏற்கனவே சாட்டிலைட் மற்றும் ஆன்லைன் ஸ்ட்ரீமிங் உரிமைகள் விற்கப்பட்ட நிலையில் படம் திரையரங்க உரிமைகளை மீட்கும் சவாலை தாண்டி இந்த வருடம் நட்சத்திர நடிகர்களின் படவெற்றி பாதையை தொடருமா என்பது பொதுஜன பார்வையாளர்கள் கையில்தான் உள்ளது. சூர்யா அடித்ததடுத்து வெளியாக படங்கள் வரிசை கட்டி நிற்கும் நிலையில் இந்த படம் அவருக்கு நல்ல தொடக்கத்தை கொடுக்குமா என்று காத்திருப்போம்.
பார்வையாளர்கள் தயவு செய்து திரையரங்குகளில் படத்தை பார்க்கவும், திருட்டு பதிவை பார்ப்பதை தவிர்க்கவும்.

