பசங்க புகழ் இயக்குனர் பாண்டிராஜ் நடிகர் சூர்யாவுடன் ஒரு "கிராமப்புற குடும்ப பொழுதுபோக்கு" படத்தில் இணையவிருக்கின்றனர். சூர்யாவுடன் பாண்டியராஜ் இணைவதற்கு ரசிகர் ஒருவர் கேட்டுக் கொண்டதற்கிணங்க இயக்குனர் ரசிகனுக்கு பதிலளித்துள்ளார். தரமான நிறைவான நகைச்சுவை கலந்த குடும்ப உணர்வுகளுடன் கிராமத்து கதை ஒன்றில் பணியாற்றி வருவதாக கூறினார்.
சூர்யாவுடன் இணைத்து பெயரில்லா படத்தை சிவகார்த்திகேயன் படம் முடிந்த பிறகு இப்படத்தை ஆரம்பிக்கவுள்ளதாக தெரிவித்தார். படத்த்தின் வேலை மே 8 முதல் ஆரம்பிக்கப்படும் என்று எதிர்பாக்கப்படுகிறது. மேலும் சிவகார்த்திகேயன் நடிக்கும் படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் கதாநாயகியாக நடிக்கவிருக்கிறார். மேலும் சன் பிக்சர்ஸ் தயாரிக்கவுள்ளார். பட நடிகர்கள் மற்றும் குழுவினர் பற்றி அதிகாரப்பூர்வமாக தயாரிப்பாளர்களால் அறிவிக்கப்படும் என்றார்.
பசங்க 2 படத்தை தயாரித்து சிறந்த கதாபாத்திரத்திலும் நடித்துள்ளார். பாண்டிராஜின் பசங்க வெற்றிப் படமாக இருந்தது, முதன்முறையாக குழந்தை நட்சத்திரங்களைக் கொண்ட மற்றொரு மறக்கமுடியாத படமாக அமைந்துள்ளது.
சூர்யா தற்போது ஒரு பெரிய திட்டத்தில் வேலையாக உள்ளார். செல்வராஜன் இயக்கிய என்.ஜி.கே. வெளியீட்டுக்காக காத்திருக்கிறார். அவர் கே.வி. ஆனந்த் இயக்கத்தில் காப்பான் மற்றும் சுதா கொணகரா இயக்கத்தில் சூரரை போற்று படங்களும் வெளிடப்படவுள்ளது.

