ads

SK 16 டாப் கியரில் பட்டையை கிளப்பும் சிவகார்த்திகேயனின் அடுத்த திரைப்படம்

சிவகார்த்திகேயன் படப்பிடிப்பு தளம்

சிவகார்த்திகேயன் படப்பிடிப்பு தளம்

நடிகர் சிவகார்த்திகேயன் இயக்குனர் ராஜேஷ் அவர்களது இயக்கத்தில் நடித்து வந்த மிஸ்டர் லோக்கல் எனும் புதிய படத்தின் படப்பிடிப்பு இன்றுடன் வெற்றிகரமாக முடிவிற்கு வந்தது. இந்த நிகழ்வை தயாரிப்பாளர் மற்றும் இயக்குனருடன் கேக் வெட்டி கொண்டாடியுள்ளார் நடிகர் சிவகார்த்திகேயன். இந்த புகைப்படங்கள் தற்பொழுது வலைதளங்களில் சிவகார்த்திகேயன் ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது. முதல் முறை இயக்குனர் ராஜேஷ் அவர்களுடன் நடிகர் சிவகார்த்திகேயன் இணைதிருப்பதனால் ரசிகர்கள் மத்தியில் இந்த படத்திற்கு நல்ல வரவேற்பும், எதிர்ப்பார்ப்பும் இருந்து வருகிறது.

நடிகை நயன்தாரா இந்த படத்தில் மாறுபட்ட வேடத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் ரசிகர்கள் மிஸ் பண்ணப்போவது ஒன்றே ஒன்றை தான், இயக்குனர் ராஜேஷ் அவர்களது எல்லாப் படங்களிலும் காமெடியில் கலக்கி எடுக்கும் நடிகர் சந்தானம் அவர்களது காமேடியைதான் சொல்கிறேன். அவர் தனியாக கதாநாயகனாக நடிக்க ஆரம்பித்துவிட்டதனால் இந்த படத்தில் சிவாவின் விருப்பமான காமெடி நடிகர் “சதீஷ்” சந்தானத்தின் இடத்தை பூர்த்தி செய்துள்ளார். மிஸ்டர் லோக்கல் திரைப்படம் இந்த மாதம் 17ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாக இருப்பது குறிப்பிடத்தக்கது. இதற்கு அடுத்து நடிகர் சிவகார்த்திகேயன் நடிக்க இருக்கும் பதினாறாவது பெயரிடப்படாத திரைப்படத்தை இயக்குகிறார் இயக்குனர் பாண்டிராஜ் அவர்கள். பிரபல தயாரிப்பு  நிருவனமான “சன் பிக்சர்ஸ்” இந்த படத்தை தயாரிக்க உள்ளனர்.

இந்த புதிய படத்தின் படப்பிடிப்பு நாளை (08/05/2019) முதல் ஆரம்பமாக உள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தில் இரு முன்னணி கதாநாயகிகள் நடிக்க போவதாக புதிய தகவல்கள் வந்துள்ளது. “துப்பறிவாளன்” என்ற படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் கதாநாயகியாக அறிமுகமான நடிகை “அனு இம்மானுவேல்” முதல் முறை சிவகார்த்திகேயனுடன் இந்த புதிய படத்தில் இணைய உள்ளார். இது அவரது இரண்டாவது தமிழ் திரைப்படம் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் சிவகார்த்திகேயன் முதல் முறை தனது சொந்த தயாரிப்பு நிறுவனம் சார்பில் தயாரித்த முதல் திரைப்படமான “கனா” படத்தில் கதாநாயகியாக நடித்த “ஐஸ்வர்யா ராஜேஷ்” சிவகார்த்திகேயனின் இந்த பதினாறாவது புதிய படத்தில் இரண்டாவது கதாநாயகியாக நடிக்க உள்ளதாகவும் புதிய தகவல்கள் வந்துள்ளது. நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் “கனா” படத்தின் தெலுங்கு ரீமேக்கிலும் ஹீரோயினாக நடித்து வருவதும் குறிப்பிடத்தக்கது.

நடிகர் சிவகார்த்திகேயன் நடிக்கும் இந்த பதினாறாவது புதிய படத்திற்கு இசையமைக்கிறார் பிரபல இசையமைப்பாளர் திரு.D.இமான் அவர்கள். நடிகர் சிவகார்த்திகேயன் மற்றும் இசையமைப்பாளர் D.இமான் இருவரும் இணையும் நான்காவது திரைப்படம் இது. சிவகார்த்திகேயனுக்கு இமான் அவர்கள் இசையமைத்த “வருத்தப்படாத வாலிபர் சங்கம்” “ரஜினிமுருகன்” “சீமராஜா” ஆகிய மூன்று படத்தின் பாடல்கள் மற்றும் பின்னிசை அனைத்தும் ரசிகர்களை அதிகமாக கவர்ந்தது குறிப்பிடத்தக்கது. இந்த முறையும் இருவரது கூட்டணியில் உருவாகும் பாடல்கள் பட்டி தொட்டி எங்கும் பட்டையைக் கிளப்ப போவது உறுதி. மேலும் இந்த படத்தில் காமெடி நடிகர்களான யோகி பாபு மற்றும் சூரி இணைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

நல்ல நடிகராகவும், நல்ல தயாரிப்பாளராகவும் உருவெடுத்து வளர்ந்து வரும் சிவகார்த்திகேயன் இயக்குனர் பாண்டிராஜ் படத்திற்கு பிறகு “இரும்புத்திரை” இயக்குனர் திரு.PS.மித்திரன் அவர்களது இயக்கத்திலும், “இன்று நேற்று நாளை” படத்தின் இயக்குனர் திரு.ரவிகுமார் அவர்களது இயக்கத்திலும் தொடர்ந்து நடிக்க உள்ளார். ரவிகுமார் இயக்கம் படத்திற்கு இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைப்பதும் குறிப்பிடத்தக்கது.

SK 16 டாப் கியரில் பட்டையை கிளப்பும் சிவகார்த்திகேயனின் அடுத்த திரைப்படம்