ஹீரோ படம் தமிழ் ராக்கர்ஸ் இணையத்தில் லீக் ஆனது: இன்று இயக்குனர் மித்ரன் இயக்கத்தில், சிவகார்த்திகேயனின் நடிப்பில் வெளியான ஹீரோ திரைப்படம், வெளியான முதல் நாளான இன்றே தமிழ் ராக்கர்ஸ் இணையதளத்தில் லீக் செய்யப்பட்டுள்ளது.

நம்ம வீட்டு பிள்ளை படத்திற்கு பின் வெளியாகும் சிவா கார்த்திகேயனின் அடுத்த படம் ஹீரோ. கல்வியை மைய படுத்தி, அதில் நடக்கும் தவறுகளை எதார்த்தமாக இயக்கி, தமிழ் சினிமாவின் முதல் சூப்பர் ஹீரோ வெற்றிப்படத்தை கொடுத்துள்ளார் இயக்குனர் மித்ரன்.

மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது இந்த படம். இன்று அதிகாலை நான்கு மணி காட்சி முதல் சென்னையில் உள்ள சில திரையரங்குகளில் வெளியாகி, அமோக வரவேற்பை பெற்றுள்ளது.

படம் பார்த்து வெளியே வந்த பார்வையாளர்களிடம் விசாரித்தபோது, படம் மிகவும் நன்றாக உள்ளதாகவும், பெற்றோர்கள் கண்டிப்பாக குழந்தைகளுடன் வந்து பார்க்க வேண்டிய படம் என்று கூறினார்கள்.

நல்ல வரவேற்பை பெற்றுள்ள இந்த ஹீரோ படம், தமிழ் ராக்கர்ஸ் இணையத்தில் வெளியானது மிகுந்த அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது. இது போன்ற சமூக படங்கள் மக்கள் திரையரங்கிற்கு சென்று பார்ப்பது நல்லது.