ads
சிவகார்த்திகேயன் மற்றும் பாலா ஆகிய இருவரின் படங்களும் ஒரே நாளில் மோதல்
ராம் குமார் (Author) Published Date : Sep 03, 2025 18:09 ISTபொழுதுபோக்கு
வரும் செப்டம்பர் 5 ஆம் தேதி, சிவகார்த்திகேயனின் மதராஸி திரைப்படமும், KPY பாலாவின் முதல் படமான காந்தி கண்ணாடியும் ஒரே நாளில் வெளியாகின்றன. விஜய் டிவியின் KPY நிகழ்ச்சி மூலம் பிரபலமான இவர்கள் இருவரும், தற்போது திரையில் நேருக்கு நேர் மோதுகின்றனர்.
சமீபத்தில், KPY பாலாவின் காந்தி கண்ணாடி படத்தின் ஒரு நிகழ்ச்சியில் பேசிய நடிகர் விஜய் சேதுபதி, உன் முதல் படத்திற்கே இவ்வளவு கூட்டம் வந்திருப்பது உனக்குக் கிடைத்த பெரிய வெற்றி என்று பாராட்டினார். மேலும், படத்தின் பிரஸ் மீட்டில் பாலா பேசிய விதம், ரசிகர்களிடையே படத்திற்கான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.
சிவகார்த்திகேயனைப் போலவே, பாலாவும் இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி சினிமாவில் தனக்கென ஒரு இடத்தைப் பிடிப்பாரா என்பதுதான் அனைவரின் கேள்வியாக உள்ளது. இந்த இரு படங்களில் எது வெற்றிபெறும் என்பது படம் வெளியான பிறகுதான் தெரியும்.