ads

சிந்துபாத்: வழக்கு ஓய்ந்து நாளை உலகெங்கும் வெளியாகிறது விஜய் சேதுபதியின் ஆக்க்ஷன் திரைப்படம்

சிந்துபாத்

சிந்துபாத்

விஜய் சேதுபதி அஞ்சலி நடிப்பில் அருண் குமார் இயக்கத்தில் கடந்த வாரம் வெளியாக இருந்த சிந்துபாத் திரைப்படம் கடன் பாக்கி பிரச்சனைகளால் வெளியாகாமல் போனது. வழக்கு நடந்து வந்த நிலையில் பட தாயரிப்பாளர்களான கே ப்ரோடக்ஷன்ஸ் ஆர்கா நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்து படம் வெளியாக ஏற்பாடு செய்தனர்.

தாய்லாந்தை மையமாக கொண்டு உருவான இத்திரைப்படம் நாளை ஜூன் 27 அன்று திரையரங்குகளை சென்றடைகிறது. படத்தில் விஜய் சேதுபதி மற்றும் அஞ்சலி கணவன் மனைவியாக நடித்துள்ளனர். யுவன் ஷங்கர் ராஜா இசையில் பாடல்கள் ரசிகர்களின் மனதை கவர்ந்து எதிர்பார்ப்பை கூட்டிய நிலையில் பின்னணி இசை எவ்வாறு இருக்கும் என்று ஆவலுடன் உள்ளனர்.

விஜய் சேதுபதியின் மகனான சூரியா இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளது குறிப்பிடத்தக்க ஒன்று. சேதுபதி படத்தில் அசத்திய கூட்டணி இந்த முறையும் வெல்லுமா என்பது இன்னும் சில மணி நேரத்தில் தெரியவரும். 

சூப்பர் டீலக்ஸ் படத்தில் திருநங்கையாக நடித்து ரசிகர்களின் மனதை கவர்ந்த மக்கள் செல்வன் தற்போது ஆக்ஷன் ஹீரோவாக காலம் காணவுள்ளார். படத்திற்கு படம் மாறுபட்ட கதாபாத்திரம் மற்றும் வித்தியாசமான கதைக்களங்களை தேர்வு செய்யும் விஜய் சேதுபதி தமிழ் சினிமா ரசிகர்களின் மனதில் நீங்க இடம் பிடித்துள்ளார். இவரின் நடிப்பில் நாளை வெளியாகவுள்ள சிந்துபாத் கண்டிப்பாக பார்வையாளர்களை திருப்திப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சிந்துபாத்: வழக்கு ஓய்ந்து நாளை உலகெங்கும் வெளியாகிறது விஜய் சேதுபதியின் ஆக்க்ஷன் திரைப்படம்