ரஜினியின் பேட்ட படத்திற்கு யுஏ சான்றிதழ்

நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள 'பேட்ட' படம் வரும் பொங்கலுக்கு வெளியாகவுள்ளது. விஜய் சேதுபதி, பாபி சிம்ஹா, நவாஸுதீன், சிம்ரன், த்ரிஷா போன்ற பல முன்னணி நட்சத்திரங்கள் நடிப்பில் உருவாகியுள்ள இந்த படத்தினை சன் பிக்ச்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.

ராக் ஸ்டார் அனிருத்தின் இசையமைப்பில் உருவாகியுள்ள இந்த படத்தின் மரண மாஸ், உல்லாலா, ஆஹா கல்யாணம் போன்ற பாடல்கள் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடம் அமோக வரவேற்பினை பெற்றுள்ளது. வரும் பொங்கலுக்கு வெளியாக உள்ள இந்த படத்தின் தணிக்கை குழு சான்றிதலுக்காக படக்குழுவினர் காத்திருந்தனர். தற்போது தணிக்கை குழு இந்த படத்திற்கு யுஏ சான்றிதழை வழங்கியுள்ளது. இந்த படம் நாட்டை  துயரத்தில் ஆழ்த்தும் ஆணவ கொலைகளை மையமாக வைத்து உருவாகியுள்ளது. இந்த படத்தின் ட்ரைலரை வரும் புத்தாண்டில் வெளியிட உள்ளனர்.

Latest Post