ads
ரஜினி, கமல் இணைகிறார்களா? 1000 கோடி வசூல் சாத்தியமாகுமா ?
ராம் குமார் (Author) Published Date : Aug 21, 2025 18:28 ISTபொழுதுபோக்கு
தமிழ் சினிமா வரலாற்றில் இதுவரை நிகழாத ஒரு சாதனை 1000 கோடி வசூல். இந்த கனவை நிஜமாக்க, ஒரு மாபெரும் கூட்டணி அமையவுள்ளதாக சமூக வலைத்தளங்களில் பரபரப்பான தகவல்கள் பரவி வருகின்றன. தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரங்களான உலகநாயகன் கமல்ஹாசனும், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தும் சுமார் 46 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் ஒரே படத்தில் இணைந்து நடிக்கப் போவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் இத்திரைப்படத்தை , இன்றைய முன்னணி இயக்குநரான லோகேஷ் கனகராஜ் இயக்கவுள்ளதாகவும் பேசப்படுகிறது.
கடைசியாக, 'நினைத்தாலே இனிக்கும்' மற்றும் 'உருவங்கள் மாறலாம்' போன்ற படங்களில் இந்த இருவரும் இணைந்து நடித்திருந்தனர். இப்போது, இவர்களின் இந்த பிரம்மாண்டக் கூட்டணி நிஜமானால், தமிழ் சினிமாவின் வரலாறு மீண்டும் புதிய அத்தியாயத்தை எழுதும் என ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.
எனினும், இந்தத் தகவல்கள் குறித்து இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இதுவரை எந்தவித அதிகாரப்பூர்வ அறிவிப்பையும் வெளியிடவில்லை. ஒருவேளை, இந்த செய்தி உண்மையாக இருந்தால், தமிழ் சினிமா ஆயிரம் கோடி என்ற இமாலய இலக்கை எட்டிவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இது வெறும் வதந்தியா அல்லது நிஜமாகவே இக்கூட்டணி அமையுமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.