ராகவா லாரன்ஸின் காஞ்சனா 3 வெளியீடு தேதி அதிகாரபூர்வ அறிவிப்பு

சிவலிங்கா படத்திற்கு பிறகு நடிகர் ராகவா லாரன்ஸ் நடிப்பில் அடுத்தத்தாக வெளியாகவுள்ள படம் 'முனி 4: காஞ்சனா 3'. சன் பிக்ச்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகி வரும் இந்த படத்தின் கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் போன்ற அனைத்து பணிகளையும் லாரன்ஸ் மேற்கொண்டு வருகிறார்.

நீண்ட காலமாக உருவாகி வந்த இந்த படத்தின் பணிகள் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. தற்போது இந்த படத்தின் வெளியீடு தேதி குறித்த அறிவிப்பினை சன் பிக்ச்சர்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளது. இதன்படி இந்த படம் அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் வெளியாவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

காமெடி கலந்த திகில் படமான இந்த படத்தில் லாரன்ஸ், ஓவியா, வேதிகா, கோவை சரளா, மனோபாலா, சத்யராஜ், கிஷோர் போன்ற பல முன்னணி நட்சத்திரங்கள் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். முனி 2, முனி 3 போன்ற படங்களுக்கு இசையமைத்துள்ள தமன் இந்த படத்திற்கும் இசையமைத்து வருகிறார். 

Latest Post