இன்று உலக அளவில் அதிக நடையில் உள்ளது வைகைபுயல் நடித்த நகைச்சுவை காட்சி. இளையதளபதி விஜய், சூர்யா, வடிவேல், ரமேஷ் கண்ணா உள்ளிட்ட பலர் நடித்து 2001 ஆம் ஆண்டு வெளி வந்த படம் "பிரென்ட்ஸ்". இப்படம் வெற்றி அடைய நகைச்சுவை காட்சிகளும் முக்கிய பங்கு வகித்தன.
இப்படத்தில் வடிவேல் நேசமணி என்ற கதாபாத்திரத்தில், ரமேஷ் கண்ணா கிருஷ்ணமூர்த்தி என்ற பாத்திரத்தின் பெயரிலும் விஜய் மட்டும் சூர்யா நேசமணியிடம் வேலை செய்யும் ஆப்ரீன்டிஸ் ஆக நடித்துள்ளனர். படத்தின் நகைச்சுவை காட்சியில், கிருஷ்ணமூர்த்தி வேலை செய்யும் போது கையில் இருக்கும் சுத்தியல் தவறி கீழே நிற்கும் நேசமணியின் தலையில் விழுந்துவிடும். நேசமணி மயக்கம் அடைந்து சரிந்து விடுவார். படத்தில் இவ்வாறு நகைச்சுவை காட்சி அமைக்கப்பட்டுள்ளது.
ட்விட்டர் பக்கத்தில் சுத்தியல் படத்தை பதிவேற்றி அதனை பற்றிய விளக்கத்தை கேட்டுள்ளார். அதற்கு விளக்கம் அளிக்கும் விதமாக இந்த நகைச்சுவை காட்சியை உண்மை சம்பவமாக பாவித்து சுத்தியில் படத்திற்கு விளக்கம் அளித்துள்ளார். இறுதியில் நேசமணிக்கு பிராத்தனை செய்யுமாறு சுத்தியல் பற்றி விளக்கம் கேட்ட நபரிடம் கூறியுள்ளார்.
உண்மை சம்பவமாகவே கருதி இணையத்தில் #prayForNesamani என்ற ஹஸ்டேக் உருவாகி முதல் இடத்தில் ட்ரெண்ட் ஆகியுள்ளது. மீம்ஸ் என்றாலே வைகை புயலின் பங்களிப்பு இல்லாமல் இருக்காது. இன்றளவும் தனது நடிப்பிலும், பேச்சாலும் அனைவரையும் மகிழ்விக்க கூடியவர். 18 வருடங்கள் கழிந்தும் நேசமணி கதாபாத்திரம் வயிறு குலுங்க சிரிக்க வைக்கின்றது
நேற்று இரவு முதல் இந்த ஹஸ்டேக் இந்தியாவில் முதல் இடத்தை பெற்றுள்ளது. சமூக வலைதளங்களில் பல வித கருத்துகளும், மீம்ஸும் வலம் வருகின்றன. சென்னை சூப்பர் கிங்ஸ் பந்து வீச்சாளர் ஹர்பஜன் சிங் தனது ட்விட்டர் பக்கத்தில் "என் இனிய நண்பன் நேசமணிக்கு எனது மஞ்சள் நிற டர்பன் மீது அதீத பிரியம் உண்டு. இன்று மட்டும் அவன் அதை அணிந்திருந்தால்...ட்ச்! மீண்டு வா நேசா! #Pray_For_Neasamani என்று பதிவேற்றி உள்ளார்.
twitter1133948375684898816
twitter1133965295247192064
twitter1133966241859657728
twitter1133904312474587136

