ads

நவம்பர் மாதம் ரிலீஸ் ஆக இருக்கும் தமிழ் படங்கள்

Tamil Movie Posters

Tamil Movie Posters

நவம்பர் மாதம் ரிலீஸ் ஆக இருக்கும் தமிழ் படங்கள்: இந்த வருடம் தீபாவளிக்கு திரைக்கு வந்த பிகில் மற்றும் கைதி திரைப்படங்கள் இந்த வராம்  வரை திரையரங்குகளை ஆக்கிரமித்து கொண்டிருக்கிறது. வசூல், போன வார  இறுதியில் இருந்தே குறைய தொடங்கியுள்ளது. இந்த வாரம் இரண்டு புதிய திரைப்படங்கள் வெளிவர இருக்கிறது.

1. சுந்தர் சி இயக்கத்தில் ஆக்‌ஷன் திரைப்படம்.

வந்தா ராஜாவா தான் வருவேன் படத்தை அடுத்து இயக்குனர் சுந்தர் சி இயக்கத்தில் வெளிவர இருக்கும் படம் "ஆக்‌ஷன்" . விஷால் மற்றும்  தம்மன்னா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர், தனது குடும்பத்திற்காக எதிரிகளை பழிவாங்கும் ஒரு ஆக்‌ஷன் கலந்த "ஆக்‌ஷன்" திரைப்படம்.

2. விஜய்சேதுபதி நடிப்பில் சங்கத்தமிழன் திரைப்படம்

விஜய்சேதுபதி நடிப்பில் இந்த வருடம் வெளிவரும் நான்காவது திரைப்படம் சங்கத்தமிழன். இதற்கு முன் வெளியான சிந்துபாத் திரைப்படம் எதிர்பார்த்த அளவிற்கு வசூல் சாதனை படைக்கவில்லை, ஒரே வாரத்தில் திரையரங்கை விட்டு வெளியே சென்றுவிட்டது. இந்த வாரம் வெளியாக இருக்கும் சங்கத்தமிழன் படமும் ஒரு  ஆக்‌ஷன் திரைப்படம், இயக்குனர் விஜய் சந்தர் இயக்கத்தில் வெளிவர உள்ளது. இதற்கு முன் விஜய் சந்தர் சிம்பு நடிப்பில் வாலு மற்றும், விக்ரம் நடிப்பில் ஸ்கெட்ச் திரைப்படங்களை இயக்கியவர்.

3. சமுத்திரக்கனி நடிப்பில் அடுத்த சாட்டை

மக்களுக்கு தேவையான கருத்துள்ள படங்களில் நடிப்பதும், சிறந்த படங்களை தேர்வு செய்து நடிப்பது இயக்குனர் மற்றும் நடிகர் சமுத்திரக்கனியின் வழக்கம். இவரின் முந்தய படம் "சாட்டை" , பள்ளயில் மாணவர்களை எவ்வாறு நடத்த வேண்டும், அவர்களை எப்படி நன்றாக படிக்க வைப்பது போன்ற சமூக நலன் உள்ள படத்தில் நடித்து வெற்றியும் கண்டார். அதே வகையில், இந்த முறை " அடுத்த சாட்டை " என்ற பெயரில்,  கல்லூரி சார்ந்த படத்தில் நடித்துள்ளார் சமுத்திரக்கனி.

நவம்பர் மாதம் ரிலீஸ் ஆக இருக்கும் தமிழ் படங்கள்