ads

என்ஜிகே படம் சென்னை மற்றும் தமிழகத்தில் வசூல் மலை: முதல் நாள் பாக்ஸ் ஆபீஸ் விவரம்

என்ஜிகே

என்ஜிகே

செல்வராகவன் இயக்கத்தில் சூர்யா நடித்து வெளிவந்த என்ஜிகே படம் முதல் நாளில் பெரும் ஓப்பனிங் வசூலை ஈட்டி சூர்யாவின் சமீபத்திய பட வரிசையில் சாதனை படைத்தது. படம் தமிழகத்தில் மட்டும் 10 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் செய்து இரண்டிலக்கு ஓப்பனிங் பெற்றது. இது நடிகர் சூர்யாவிற்கு மமுதல் முறை ஆகும், மேலும் படம் தள்ளிபோய் பெரிய விளம்பரமும் இல்லாமல், வேலை நாளன்று வெளியாகி இச்சாதனையை செய்திருப்பது வியக்கத்தக்க உண்மை.

சென்னை நகரத்தில் மட்டும் படம் 1.03 கோடி ருபாய் ஈடு சென்னையில் முதல் நாளில் கோடி ருபாய் வசூல் செய்த முதல் சூர்யா படம் என்ற பெருமையையும் பெற்றது. இவ்வாறு தமிழகம் முழுவதும் நல்ல வரவேற்பை பெற்ற இப்படம் தமிழகத்திற்கு வெளியில் சுமாரான ஓப்பனிங்கையே பெற்றது. கேரளா மற்றும் ஆந்திர மாநிலங்களில் வழக்கம் போல் இல்லாமலா சூர்யா படத்திற்கு குறைந்த வசூலையே ஈட்டியது. கர்நாடகா மற்றும் வெளிநாடு சந்தையில் சுமாரான வரபேற்பயும் விமர்சனங்களையும் பெற்று வருகிறது.

சூர்யா செல்வராகவன் கூட்டணி மீது பெரும் எதிர்பார்ப்போடு வெளியான என்ஜிகே எதிர்பார்ப்பு முழுவதையும் பூர்த்தி செய்ய தவறியது. ரசிகர்கள் மற்றும் பார்வையாளர்கள் சூர்யாவின் நடிப்பை ரசித்து பாராட்டி வரும் நிலையில் படத்தில் பல குழப்பங்கள் இருப்பதையும் சுட்டி காட்டுகின்றனர். வழக்கமாக செல்வா படம் ஒரு 5 அல்லது 10 வருடமா கழித்தே தகுந்த வரவேற்பை பெரும் வழக்கம் போல, என்ஜிகேவும் அந்த வரிசையில் சேருமா என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.

முதல் வார இறுதி வசூலை முன்னோக்கி காத்திருக்கும் ரசிகர்களுக்கு இது ஒரு பெரும் செய்தி, படத்தின் ஆன்லைன் முன்பதிவு நன்றாக சென்றுகொண்டிருக்கும் நிலையில் முதல் வார வசூல் உச்சிக்கு செல்லும் என்பது தெரிகிறது. ரசிகர்கள் கொண்டாடி வரும் என்ஜிகே, மக்கள் மனதில் எவ்வாறு இடம் பிடிக்கிறது என்பது வரும் நாட்களில் தெரிய வரும். மே 31 வெளியாகி திரையரங்கில் வெற்றிகரமாக ஓடி வரும் என்ஜிகேவின் பாக்ஸ் ஆபீஸ் வெற்றி வரும் வார திரையரங்க மக்களின் எண்ணிக்கை பொறுத்தே தீர்மானமாகும்.

என்ஜிகே படம் சென்னை மற்றும் தமிழகத்தில் வசூல் மலை: முதல் நாள் பாக்ஸ் ஆபீஸ் விவரம்