ads

எப்போது தொடங்குகிறது சூர்யாவின் என்ஜிகே சென்னை டிக்கெட் முன்பதிவு

என்ஜிகே

என்ஜிகே

சென்னை திரையரங்குகளில் பொதுவாக படங்கள் வெளியாவதற்கு ஒரு வாரம் முன்னதாகவே டிக்கெட் முன்பதிவு தொடங்கி விடும். அதுவும் நட்சத்திர ஹீரோக்களின் படம் என்றல் வெகுநாட்களுக்கு முன்னதாகவே முன்பதிவு தொடங்கி அரங்கங்கள் நிறைந்துவிடும். சூர்யா நடிப்பில் இந்த வாரம் வெளிவரவிருக்கும் என்ஜிகே திரைப்படம் வெளியாவதற்கு இன்னும் சில தினங்களே உள்ள நிலையில், சென்னை திரையரங்கங்களில் இன்னும் டிக்கெட் முன்பதிவு தொடங்கவில்லை. மேலும் இன்னும் படம் வெளியாகும் செய்தி திரைஅரங்கங்களால் முடிவு செய்யபடவும் இல்லை.

இதற்கு காரணம் இன்னும் பட விநியோக உரிமை முடியாததே ஆகும். தமிழகத்தை தவிர மற்ற மாநிலங்களில் படம் முன்பதிவு தொடங்கிய நிலையில், இன்னும் சென்னையில் தொடங்காதது ரசிகர்களை மேலும் காத்திருக்க செய்தது. பெரிதும் எதிர்பார்க்கப்படும் சூர்யாவின் என்ஜிகே ரிலீசிற்கு முன்பே பல சாதனைகளை செய்து வருகிறது. மிக உயரமான கட்அவுட், ரசிகர் காட்சிகள் என ரசிகற்பட்டாலம் தன வேலையே தொடங்கி விட்டது.

சென்னை திரையரங்கங்கள் அதிகாரபூர்வ கையெழுத்திட காத்திருக்கும் நிலையில் முன்பதிவு செவ்வாய் இரவு அல்லது புதன் காலை என்ற முழுநேரமாக தொடங்கும் என்று கூறப்பட்டுள்ளது. ரசிகர் காட்சி டிக்கெட்டுகள் ஏற்கனவே பல இடங்களில் முடிவடைந்த நிலையில் இனி முன்பதிவு தொடங்கினாள் புக்கிங் நிலவரம் சூடுபிடிக்கும் என்று திரை வட்டாரங்கள் தெரிவிக்கின்றது. ஏற்கனவே கேரளா, பெங்களூரு போன்ற மாவட்டங்களில் ரசிகர் காட்சிகள் புக்கிங் நிலவரம் நன்றாக இருப்பதால் தமிழகத்தில் முன்பதிவு தொடங்கியவுடன் ரசிகர்கள் டிக்கெட்டுகளை காலி செய்து விடுவார் என்பது உறுதி.

எப்போது தொடங்குகிறது சூர்யாவின் என்ஜிகே சென்னை டிக்கெட் முன்பதிவு