நடிகை நயன்தாரா நடிப்பில் இந்த ஆண்டு வெளியான இமைக்கா நொடிகள் மற்றும் கோலமாவு கோகிலா இரண்டு படங்களுமே வசூலிலும் நல்ல முன்னேற்றம் கண்டு ரசிகர்கள் மத்தியிலும் அமோக வரவேற்பினை பெற்றிருந்தது. அடுத்த ஆண்டு துவக்கமே நயன்தாரா ரசிகர்களுக்கு சரவெடியாக இருக்கும்.

நடிகர் அஜித் மற்றும் நயன்தாரா நடிப்பில் உருவாகி வரும் 'விஸ்வாசம்' படம் பொங்கலுக்கு வெளியாகவுள்ளது. இதன் பிறகு நயன்தாராவின் அடுத்த த்ரில்லர் படமான 'கொலையுதிர் காலம்' படத்தின் வெளியீடு குறித்த அறிவிப்பும் தற்போது வெளியாகியுள்ளது. இதன்படி இந்த படமும் ஜனவரியில் வெளியாகவுள்ளது. இந்த படத்தினை உன்னைப்போல் ஒருவன், பில்லா 2 போன்ற படங்களை இயக்கியுள்ள இயக்குனர் சக்ரி டோலெட்டி இயக்கியுள்ளார். இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.