ads

நயன்தாராவின் படத்திற்கு இடைக்கால தடை: தலைப்பு விவகாரத்தால் உச்ச நீதி மன்றம் உத்தரவு

நயன்தாராவின் படத்திற்கு இடைக்கால தடை

நயன்தாராவின் படத்திற்கு இடைக்கால தடை

கொலையுதிர் காலம்

நயன்தாராவின் "Nayanthara" துணிகர  நடிப்பில் வெளிவரவிருக்கும் கொலையுதிர் காலம் "Kolaiyuthir Kaalam" படத்திற்கு சென்னை உயர் நீதி மன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது. வித்தியாசமான கதாபாத்திரத்தில் சாக்ரி டோலெட்டி "Chakri Toleti" இயக்கத்தில் நடித்துள்ளார் மேலும் யுவன் ஷங்கர் ராஜா "Yuvan Shankar Raja" இப்படத்திற்கு இசை அமைத்துள்ளார்.

இப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் நடிகர் ராதா ரவி இப்படத்தின் கதாநாயகி பற்றி தவறான கருத்துக்களை கூறி திரைப்பட துறையில் சர்ச்சைகளை ஏற்படுத்தினார். தவறான கருந்துளை வெளியிட்டதால் நயத்தாராவின் காதல் ஜோடியான விக்னேஷ் சிவன் அரசியல் முகவரியை பயன்படுத்தி சங்கத்தில் இருந்து தற்கலிகமாக ராஜினாமா செய்யவைத்தார் என வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

நயன்தாரா - விக்னேஷ் சிவன்

காதல் ஜோடி தற்போது இணைத்து வாழ்கின்றனர். மேலும் விடுமுறைக்கு இருவரும் கிரீஸ் நாட்டிற்கு சென்று சமூக வலைத்தளங்களில் இருவரும் சேர்ந்து எடுத்த படங்களை பதிவேற்றி உள்ளனர். விக்னேஷ் சிவன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நான் என் வாழ்க்கையில் வேண்டிய கனவு உலகில் பார்க்கின்றேன் என பதிவேற்றி உள்ளார். 

தோல்வி படங்கள்

நயன்தாராவின் முந்தய நடிப்பில் சார்ஜுன் இயக்கத்த்தில் வெளியான ஐரா படம் பெரிய எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தினாலும் வசூலில் பெரும் அளவில் பின்னடைவு சந்தித்தது. இந்த மாதம் சிவகார்த்திகேயன் நடிப்பில் ராஜேஷ் இயக்கத்தில் வெளிவந்த மிஸ்டர். லோக்கல் படமும் பெரும் தோல்வியை சந்தித்தது. சிவகார்த்திகேயன் சினிமா வாழ்க்கையில் பின்னடைவு தரும் படமாக அமைந்தது.

இரண்டு படங்களும் எதிர் பார்த்த நிலையில் பெரும் வரவேற்பு கிடைக்காததால் சிறிய நம்பிக்கை தரும் விதமாக இப்படம் அமைந்தது. ஆனால் இடைக்கால தடையால் படத்தின் வெளியீட்டில் தாமதம் ஏற்பட்டுள்ளது. 

இயக்குனர் பாலாஜி குமார்

மறைந்த எழுத்தாளர் சுஜாதா கொலையுதிர் காலம் என்ற தலைப்பில் நாவலை எழுதியுள்ளார். இயக்குனர் பாலாஜி குமார் முறையாக பதிவு செய்து தனது தாயாரின் பெயரில் ரூபாய் 10 லட்சம் கொடுத்து சுஜாதா மனைவியிடம் இருந்து தலைப்பிற்கான உரிமத்தை பெற்றார். இயக்குனர் பாலாஜி குமார் "விடியும் முன்" என்ற படத்தை இயக்கியவர். இந்நிலையில் அதே தலைப்பை கொண்டு திகில் படத்தில் நயன்தாரா நடிப்பில் ஜூன் 14 வெளிவர உள்ளது.

உச்ச நீதிமன்றம் தடை உத்தரவு

இயக்குனர் பாலாஜி குமார் தனது தாயின் பெயரில் பதிவான தலைப்பை இப்படத்திற்கு பயன்படுத்தியதால் காப்புரிமை மீறல் கீழ் வழக்கை பதிவு செய்துள்ளார். மேலும் இப்படத்தை தடை செய்யுமாறும் கோரிக்கை விடுத்துள்ளார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி கிருஷ்ணசுவாமி ராமசாமி, 21 ம் தேதிக்கு முன்னர் மனுதாரருக்கு விடையளிக்க திரைப்பட நிறுவனத்திற்கு உத்தரவிட்டுள்ளார். வழக்கு விசாரணைக்கு பின்பே படத்தின் வெளியீடு பற்றி அறிய இயலும். இதற்கிடையில் படக்குழுவினருக்கு இயக்குனர் பாலாஜி குமாருக்கும் சமரச பேச்சுவார்த்தை மூலம் முடிவு செய்தால் படம் குறிப்பிட்ட நேரத்தில் வெளி வர வாய்ப்புகள் உள்ளன.

நயன்தாராவின் படத்திற்கு இடைக்கால தடை: தலைப்பு விவகாரத்தால் உச்ச நீதி மன்றம் உத்தரவு