ads

நடிகர் சங்க தேர்தல் 2019: விஷாலுக்கு எதிராக இஷாரி கணேஷ் போட்டி

நடிகர் சங்க தேர்தல்

நடிகர் சங்க தேர்தல்

2015 ஆம் ஆண்டு நடைபெற்ற நடிகர் சங்க தேர்தலில் நடிகர் விஷால் சங்கத்தில் நடந்த ஊழல்களை பற்றி விரிவான அறிக்கையை வெளியிட்டார். அச்சமயத்தில் இருந்த நிர்வாகிகள் சங்கத்தில் ஊழல் செய்ததாகவும், நடிகர் சங்கம் நிலத்தை குத்தகைக்கு கொடுத்ததாகவும் விஷால் குற்றம் சாட்டினார் . அந்த ஆண்டு நடைபெற்ற தேர்தலில் விஷால் ஒரு அணியை அமைத்தார் அதற்கு பாண்டவர் அணி என்ற பெயர் சூட்டினர். இளம் நடிகர்களை கொண்ட அணியை மூத்த நடிகர் நாசர் தலைமை தாங்கி வழிநடத்தினார். கடுமையான போட்டிகளுக்கு இடையிலும் பாண்டவர் அணி வெற்றி பெற்றது. 

நான்கு ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் நடிகர் சங்க தேர்தல் நடைபெற உள்ளது. நடக்கவிருக்கும் நடிகர் சங்க தேர்தலுக்கு பிரதானமான பிரச்சனையாக நடிகர் விஷால் இருந்து வருகின்றார். பாண்டவர் அணியில் உள்ள சில அன்பர்கள் அந்த அணியில் இருந்து பிரிந்து சென்று சுவாமி  சங்கரதாஸ் அணி என்று தொடங்கி பாண்டவர் அணிக்கு எதிராக இத்தேர்தலில் போட்டியிடுகின்றனர். சுவாமி சங்கரதாஸ் அணி முதுபெரும் நடிகர் பாக்கியராஜ் அவர்களை தலைவர் வேட்பாளராக கொண்டு களமிறங்க உள்ளனர். ஜூன் 23 தேர்தல் நடைபெறவிருக்கும் நிலையில் நடிகர் சங்க தேர்தல் களம் சூடு பிடித்துள்ளது. 

நடிகர் விஷால் மீது மனக்குறை ஏற்பட காரணம்??

பொது செயலாளராக இருந்தபோதிலும், நிறைவேற்றுக் குழுவின் 18 கூட்டங்களில் நடிகர் விஷால் கலந்து கொள்ளவில்லை. பொதுச் செயலாளர் இத்தகைய பொறுப்பற்ற முறையில் செயல்படுகையில் ஒரு அணி எவ்வாறு செயல்பட முடியும்? விஷால் அவரது தனிப்பட்ட பலத்தை  உயர்த்துவதற்காக சங்கத்தை பயன்படுத்துவதாக குற்றம் சாட்டினர். ஜனநாயக ரீதியான அணுகுமுறையை எடுத்துக்கொள்வதற்குப் பதிலாக அவரது விருப்பப்படி உறுப்பினர்களை சேர்ப்பதும், நீக்குவதுமாக இருந்தார் என சுவாமி சங்கராதாஸ் அணியின் உறுப்பினர்களில் ஒருவர் தெரிவித்துள்ளார். ரமணன் மற்றும் நந்தன் இப்போது இருக்கும் அணியின் நிர்வாகிகளாக உள்ளனர். சங்க விஷயங்களில் ஆதிக்கம் செலுத்தியும், தகாத வழியில் செல்வாக்கை பயன்படுத்துவதாக குற்றச்சாட்டுகளை வைத்தனர்.

பாக்கியராஜுடன் கூட்டணி ஏன்?

பிரிந்து வந்த சுவாமி சங்கரதாஸ் அணியினர் பாக்கியராஜை தலைமையாக கொண்டு நடிகர் சங்க தேர்தல் களத்தை சந்திக்கவுள்ளார். முதுபெரும் இயக்குனர், மரியத்தைக்குரிய நடிகர், தொழில் ரீதியாக எவ்வித சர்ச்சைகள் இல்லாத மனிதர் மேலும் நடிகர் நாசருக்கு இணையாக உள்ளவர். இதன் அடிப்படையிலேயே தலைமை பொறுப்பை தீர்மானித்து உள்ளனர் அணியின் உறுப்பினர்கள். 

இஷாரி கணேஷ் vs விஷால் 

 தயாரிப்பாளரும் நடிகருமான இஷாரி கணேஷ் சுவாமிசங்கராதாஸ் அன்வின் ஆதாரமாகக் கருதப்படுகிறார். அவர் கடந்த தேர்தலில் பாண்டவர் அணிக்கு ஆதரவளித்திருந்தார், ஆனால் அவர்களது செயல்பாட்டினால் அதிருப்தி அடைந்தார். மேலும் இத்தேர்தலில் சுவாமி சங்கரதாஸ் அணிக்கு ஆதரவு தெரிவித்து விஷாலுக்கு எதிராக போட்டியிடுகின்றார். கணேஷின் தந்தை இன்றளவும் திரைப்பட கலைஞர்களால் போற்றப்படும் கலைஞர் ஆவர். இந்த பலத்தை கொண்டு பெரிய குழுவை அமைத்து போட்டியிட வாய்ப்பு உள்ளது. எனவே இம்முறை வெற்றி கனியை பறிக்க விஷால் தனது சுய முயற்சிகளை கண்டிப்பாக எடுக்க வேண்டும். 

நடிகர் சங்க தேர்தல் 2019: விஷாலுக்கு எதிராக இஷாரி கணேஷ் போட்டி

நடிப்பு தூண்களின் ஆதரவு?

இந்நிலையில் நடிப்பு உலகத்தில் இரு ஜாம்பவான்களான ரஜினி மற்றும் கமலிடம் தனக்கான ஆதரவை ஈட்டியுள்ளார் இயக்குனர் பாக்கியராஜ். நடிகர் கமல் இரு அணியிலும் எனது நண்பர்கள் உள்ளதால் ஒரு அணிக்காக மற்றொரு அணியை விட இயலாது. சங்க கட்டிடத்தின் பணி  அவசியமானதை முடிக்குமாறு பாக்கியராஜிடம் கூறியுள்ளார். நடிகர் ரஜினி, பாக்கியராஜ் தலைமை இருந்தால் அனைத்தும் நல்வழியில் அமையும் என கூறியுள்ளார். அதே சமயத்தில் பாண்டவர் அணி கமலுடன் புகைப்படத்தை வெளியிட்டு தங்கள் அணிக்கு ஆதரவு தருவதாக அறிக்கை கொடுத்துள்ளனர்.

கடந்த தேர்தலில் வெற்றி பெற்ற அணியின் மீதும் இவ்வித புகார்களும், மனக்கசப்புகளும் இல்லை. நடிகர் விஷால் மீது அதிருப்தியை தெரிவித்து உள்ளனர். நடிகர் நாசர் மற்றும் நடிகர் கார்த்தியின் மீது எவ்வித ஊழல் குற்றமும் இதுவரை வந்தது இல்லை. ஆனால் நாசரின் தலைமை வலுவான ஒன்றாக இல்லாததாக கருதப்படுகின்றது. இரு அணிகளுக்கு இடையே நடக்கும் வாதங்கள் தற்காலிகமானது தேர்தல் களத்தை சந்திக்கவே இவ்வாறான நிலைகள் ஏற்படுகின்றன.

தற்போதைய நிலையில் ஏற்பட்ட பின்னடைவு:  

இயக்குனர் பாக்கியராஜ் திரைப்பட துறையினருக்கு பணம் கொடுத்ததாக எழுந்த குற்றச்சாட்டில் அவரளித்த பதில் மேலும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. வறுமையில் இருக்கும் போது உதவி உள்ளோம். காலப்போக்கில் உதவ பணத்தை வழங்கியுள்ளோம், நாங்கள் அதிகாரத்திற்கு வந்தவுடன் அவர்களுடைய துயரங்களைத் தணிப்போம் என்று உறுதியளிக்கிறோம். நான் அல்லது வேறு நபர் இச்செயலை தான் செய்திருப்பார்கள் என பதிலளித்துள்ளார். திரைப்பட மக்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இதனை விஷால் அணியினர் சாதகமாக பயன்படுத்தி அவருக்கு ஏதிராக கோஷங்களை எழுப்பி வருகின்றனர்.தடைகளை மீறி தேர்தல் களத்தில் நின்று வெற்றி பெரும் அணியை நிதானித்து காண்போம். 

நடிகர் சங்க தேர்தல் 2019: விஷாலுக்கு எதிராக இஷாரி கணேஷ் போட்டி