ads

விரைவில் நடிகர் சங்க தேர்தல் நடத்தப்படும்: நடிகர் சங்க தலைவர் நாசர் அறிவிப்பு

விரைவில் நடிகர் சங்க தேர்தல் நடத்தப்படும்: நடிகர் சங்க தலைவர் நாசர் அறிவிப்பு

விரைவில் நடிகர் சங்க தேர்தல் நடத்தப்படும்: நடிகர் சங்க தலைவர் நாசர் அறிவிப்பு

நடிகர் சங்கத் தலைவர் நாசர், நடிகர் சங்க தேர்தல் விரைவில் நடத்தப்படும் என்று அறிவித்துள்ளார். தற்போதைய நிர்வாகம் மற்றும் நிர்வாக உறுப்பினர்கள்  நீட்டிக்கப்பட்ட மூன்று ஆண்டு காலம் சனிக்கிழமை  உடன் முடிவடைந்த நிலையில் ஞாயிற்றுக்கிழமை கூட்டம் நடத்தப்பட்டு, ஊடகங்களுக்கு அறிவித்தார். 

மேலும் செய்தியாளர்களிடம் "தேர்தல் நடவடிக்கைகளை மேற்பார்வையிட தேர்தல் அலுவலராக ஓய்வுபெற்ற நீதிபதியை  நியமிப்போம். அவரது ஆலோசனையின் அடிப்படையில், தேர்தல் தேதி அறிவிக்கப்படும் என்றும் தேர்தல் அலுவலர் தேர்தலின் நேரத்தையும் இடத்தையும் முறையாக அறிவிப்பார். இதுவே கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட முதன்மை தீர்மானம்" என்று நாசர் கூறினார்.

இந்த வாரம் முடிவடைந்தவுடன், தேர்தல் அலுவலரைத் தேர்ந்தெடுப்போம். அடுத்த வாரம், தற்போதுள்ள நிர்வாகத்தின் பொறுப்பை அதிகாரி எடுத்துக்கொண்டு சட்டதிட்டங்களை வழிநடத்துவார் என்று  நடிகர் சங்கத்தின் துணைத் தலைவர் பொன்வண்ணன் தெரிவித்தார்.

வெளியேறும் நிர்வாகத்தின் செயல்திறனைப் பற்றி நாசரிடம் கேட்கப்பட்டது. அவர்கள் கூறிய ஒவ்வொரு வாக்குறுதிகளும்  நிறைவேற்றப்பட்டது என்று தெரிவித்தார். நடிகர் சங்கத்தின் கட்டிடத்தை பற்றி  பொன்வண்ணன் கூறுகையில், "எங்களது மிகப்பெரிய குறிக்கோள் கட்டுமானத்தை முடிக்க வேண்டும். முதல் நாளில் இருந்ததே அனைவரும் வேலை செய்கிறோம்.

நாங்கள் நிலத்தை மீட்டெடுத்து புதிய ஒப்பந்தங்களை மேற்கொள்ளப்பட்டு, தேவையான நிதிகளை உயிர்த்தி, அரசாங்க அமைப்புகளிலிருந்து ஒப்புதல் பெற்று, பின்னர் கட்டுமானத்தை ஆரம்பிக்க வேண்டும் என்று கூறினார். பல சட்ட தடைகளை எதிர்கொண்டோம் மேலும் இந்த காரணங்களால் ஆறு மாத காலம் செயல்முறையில்  தாமதம் ஏற்பட்டது'' என்று செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

விரைவில் நடிகர் சங்க தேர்தல் நடத்தப்படும்: நடிகர் சங்க தலைவர் நாசர் அறிவிப்பு