ads

மிஸ்டர் லோக்கல் ட்ரைலர் 2 மில்லினியனை கடந்து முதலிடத்தில் ட்ரெண்ட்

மிஸ்டர் லோக்கல் ட்ரைலர்

மிஸ்டர் லோக்கல் ட்ரைலர்

சிவகார்த்திகேயன் கதாநாயகனாக நடித்து ராஜேஷ் இயக்கத்தில் வெளிவரவுள்ள படம் மிஸ்டர்.லோக்கல். ஞாயிற்று கிழமை ட்ரைலர் வெளியான நிலையில் இன்றைய தினம் 20 லட்சம் பார்வைகள் கிட்டியுள்ளது. 2 நிமிட அவகாசத்தில் நகைச்சுவை விருந்தை படைத்துள்ளார் இயக்குனர். குறைத்த தினங்களில் அதிகமான வரவேற்பை பெற்றுள்ளது இப்படத்தின் ட்ரைலர்.

கதையை எழுதி இயக்கியுள்ளார் ராஜேஷ். படத்தில் இடம்பெற்ற நட்சத்திரங்கள் ராதிகா சரத்குமார், தம்பி ராமையா, யோகி பாபு, சதிஷ், ஹரிஜ, ரோபோ ஷங்கர் நடித்துள்ளனர். கதாநாயகி நயன்தாரா கீர்த்தனா என்ற கதாபாத்திரத்தில் தலைமை நிர்வாக அதிகாரியாக நடித்துள்ளார். வழக்கம் போல் சிவகார்த்திகேயன் அனைவருக்கும் பிடித்த கதாபாத்திரத்தில் மனோகர் என்ற பெயருடன் நடித்துள்ளார். ட்ரைலரில் இருவரும் விரோதத்தை காண்பித்தாலும் பாடல் காட்சிகளில் சேர்ந்து நடித்துள்ளனர். 

ட்ரைலரில் வரும் நகைச்சுவை தருணங்களில் சிவாக்கார்த்திகேயன்  நயன்தாராவின் முந்தைய படத்தின் கதாபாத்திரமான கோலமாவு கோகிலாவை பற்றி குறிப்பிடுகிறார். சுராவிலேருந்து  இருந்து வடிவேலுவின் அவர்களுடைய பிரபலமான பழக்கத்தை மாதிரியாக கொண்டு நகைச்சுவை காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளது. இந்த கோடைக்கு சிறந்த வெற்றி படமாக அமையும். 

இப்படத்தின் இசையமைப்பாளர்  ஹிப் ஹாப் தமிழா,  திரைப்படத்தின் ஒளிப்பதிவு தினேஷ் கிருஷ்ணன் பி மற்றும் விவேக் ஹர்ஷன் எடிட்டிங் செய்துள்ளார். இந்த படத்தின் சண்டை காட்சிகள் அன்பறிவு அவர்களால் அணைக்கப்பட்டது. தினேஷ்குமார்  பாடல்களை இயற்றியுள்ளார் .   திரு.கே. இ. ஞானவேல் ராஜாவின் ஸ்டூடியோ கிரீன் நிறுவனத்தால் தயாரிக்கப்பட்டது. இப்படம் புது கதை களம் கொண்டுள்ளது. ஊடகங்களில் கருத்துப்படி சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த மன்னன் படத்தின் மறு ஆக்கம் ஆகா இருக்கும் என கூறப்படுகிறது. விஜயசாந்தியின் கதாபாத்திரத்தின் பிரதிபலிப்பாக நயன்தாராவின் பாத்திரம் அமைந்துள்ளதாக கூறப்படுகிறது. 

மிஸ்டர் லோக்கல் ட்ரைலர் 2 மில்லினியனை கடந்து முதலிடத்தில் ட்ரெண்ட்