ads

மிஸ்டர் லோக்கல் சென்னை டிக்கெட் புக்கிங்: அதிகாலை காட்சிகள் விவரம்

மிஸ்டர் லோக்கல்

மிஸ்டர் லோக்கல்

சிவகார்த்திகேயன் நடிப்பில் இந்த வாரம் வெளிவரவிருக்கும் மிஸ்டர் லோக்கல் திரைப்படம் எதிர்பார்ப்பு சொல்லும் அளவு இல்லை என்பது புக்கிங் நிலவரங்களை பார்க்கும்போது தெரிகிறது. நடிகர் சிவகார்த்திகேயன் கோலிவுட்டில் வேகமாக ஒரு உச்சத்தை தொட்டு தனது ரெமோ படத்தில் இருந்து சென்னையில் அதிகாலை காட்சிகளை தொடர்ச்சியாக பெற்றுவந்தார். வேலைக்காரன் சீமராஜா போன்ற படங்கள் சென்னை நகரில் பெரும் எதிர்பார்ப்புடன் பல அதிகாலை காட்சிகளுடன் வெளியானது.

அனால் தற்போது அவர் நடிப்பில் வரும் மிஸ்டர் லோக்கல் திரைப்படத்திற்கு அதிகாலை காட்சிகள் இல்லை என்பது தற்போது உறுதியாகி உள்ளது. மிஸ்டர் லோக்கல் படம் இயக்குனர் ராஜேஷ் இயக்கி ஸ்டுடியோக்ரீன் தயாரிப்பில் வெளிவரவுள்ளது. நயன்தாரா நடித்து ஹிப் ஹாப் ஆதி இசையமைக்கும் இப்படம் மே 1 வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டு தற்போது சிறிது தள்ளிப்போய் வெளியாகிறது. முதல் காட்சி 8.30 மணிக்கு தொடங்குகிறது. டிக்கெட் புக்கிங் பெரிதும் கவனத்தை ஈர்க்காத நிலையில் படத்தின் வெற்றி விமர்சனங்களையும் மக்களின் கருத்தையும் நம்பி உள்ளது.

ராஜேஷ் தனது முந்தைய படங்களில் ரசிகர்களை ஏமாற்றிய நிலையில் தற்போது ஒரு நல்ல பொழுதுபோக்கு அம்சம் கொண்ட படமாக வெளிவரும் என எதிர்பார்க்கப்படும் மிஸ்டர் லோக்கல் அவருக்கு மீண்டு வர ஒரு நல்ல வாய்ப்பாக இருக்கும் என நம்பிக்கையுடன் உள்ளனர். கோவையில் முதல் காட்சி மணிக்கு தொடங்குகிறது. வெளியாவதற்கு இன்னும் ஒரு நாள் உள்ள நிலையில் இப்படத்தின் முதல் நாள் வசூல் சிவகார்த்திகேயன் முந்தைய படங்களை விட குறைவாகவே இருக்கும் என்பது தெரிகிறது. பாடல்கள் நல்ல வரவேற்பை பெற்று படத்திற்கு ஓரளவு எதிர்பார்ப்பை கூட்டியுள்ளது. எஸ் ஜே சூர்யாவின் மான்ஸ்டர் படத்துடன் மோதும் மிஸ்டர் லோக்கல் ரசிகர்களை கவர்ந்து வெற்றி பெறுமா என்பதை பொறுத்திருந்து பார்க்கவேண்டும்.

மிஸ்டர் லோக்கல் சென்னை டிக்கெட் புக்கிங்: அதிகாலை காட்சிகள் விவரம்