Bigil updates: பிகில் படத்தில் தளபதி குரலில் பாடல்

பிகில்



அட்லீ இயக்கத்தில் தளபதி விஜய் நடிக்கும் பிகில் திரைப்படம் ரசிகர்கள் இடையே பெரும் எதிர்பார்ப்பை பெற்றுள்ளது. தளபதி பிறந்தநாள் அன்று முதல் பார்வை வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது. மேலும் இரண்டாம், மூன்றாம் போஸ்டர்கள் வெளியாகி பெரும் உற்சாகத்தை தந்தது. பிகில் படத்தின் தயாரிப்பு நிறுவனமான ஏஜிஎஸ் என்டேர்டைன்மெண்ட் இன்று படத்தினை பற்றிய பிரத்தியேக தகவலை வெளியிடுவதாக அறிவித்து இருத்தது.



பிகில் திரைப்படத்தில் ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்துள்ளார். பாடலாசிரியர் விவேக் வரிகளில் தளபதி விஜய் இப்படத்திற்காக பாடல் ஒன்றை பாடியுள்ளார். கோரிக்கையை ஏற்று பாடல் பாடியதற்காக தளபதி அவர்களுக்கு நன்றி என தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி தனது 
ட்விட்டர் தளத்தில் பதிவேற்றி உள்ளார். தளபதி வெறித்தனம் என்ற பாடலை பாடி இருப்பதாக கூறியுள்ளார்.








Share on:

Latest Post