ads

மஹரிஷி திரை விமர்சனம்: விவசாயங்களுக்காக போராடும் ரிஷி

மஹரிஷி திரை விமர்சனம்

மஹரிஷி திரை விமர்சனம்

நடிகர்கள் - மகேஷ் பாபு, அல்லாரி நரேஷ், பூஜா ஹெட்ஜ், ஜகபதி பாபு.

இயக்குனர் – வம்சி.

தயாரிப்பு – தில் ராஜு, அஷ்வினி தத் மற்றும் பிரசாத் வீரா.

கதை சுருக்கம் – ஒரு பெரிய மல்டி நேஷனல் கம்பெனியின் சி.இ.ஒ, ஒரு கிராமத்திற்கு வந்து

அங்கு உள்ள விவசாயிகளுக்காக போராடுகிறார். நல்ல சமுக செய்தியை கொண்ட கதை. இயக்குனர் கதையை நன்றாக கூறியுள்ளார். விமர்சனம் - ரிஷி (மகேஷ் பாபு) மிகவும் திறமைவாய்ந்த இளைஞன், மிகவும் அறிவு கூர்மையுடைய ரிஷிக்கு எம்.டெக் முடித்தவுடன் ஒரு மிகப்பெரிய மல்டி நேஷனல் கம்பெனியில் வேலை கிடைக்குறது. வேலை கிடைத்ததும் அமெரிக்காவிற்கு பணி புரிய சென்றிவிடுகிறார். அதிவேகத்தில் தனது கடுமையான உழைப்பாலும், கூர்மையான புத்தியாலும் கம்பெனியின் சி.இ.ஒ ஆகிவிடுகிறார். இந்த சமயத்தில் ரிஷியின் (மகேஷ் பாபு) மிக நெருங்கிய நண்பனான ரவி (அல்லாரி நரேஷ்), கஷ்ட்டமான சூழ்நிலையில் இருப்பது ரிஷிக்கு தெரிய வருகிறது.

ரிஷி உடனடியாக இந்தியாவிற்கு வருகிறார் அவருடைய நண்பன் ரவியுடன் சேர்ந்து விவசாயிகளுக்காக, ஒரு மிக பெரிய ஆயில் நிறுவனத்தை எதிர்த்து போராடுகிறார். மீதி இருக்கும் கதை விவசாயிகள் உடைய கஷ்ட்டங்களுக்காக ரிஷி எவ்வாறு போராடுகிறார் என்பது தான். படத்தின் முதல் பாதி கல்லூரி வாழ்க்கையையும், ஒரு பெரிய சி.இ.ஒவின் வாழ்க்கையையும் மைய்யப்படுத்தி நகர்கிறது. இரண்டாவது பாதி கிராமத்து வாழ்க்கையையும் விவசாயிகளின் கஷ்ட்டத்தையும் மையப்படுத்தி நகர்கிறது.

எப்பொழுதும் போல் மகேஷ் பாபுவின் நடிப்பு சிறந்து விளங்குகிறது, அவருடைய வசனங்களும் அருமையாக உருவாக்கப்பட்டுள்ளது. படத்தின் கிளைமாக்ஸ் அருமை. ஆனால் படத்தின் இரண்டாவது பாகம் நீண்ட நேரம் செல்வது போல் உள்ளது. சில காட்சிகள் பார்க்கும் பொழுது ஏற்கனவே பார்த்த படம் போல் தோன்ற வைக்கிறது. தமிழில் நடிகர் விஜய் நடித்த “சர்கார்” படம் அவ்வப்போது கண்முன் வந்து போகிறது. மேலும் இரண்டு படத்திற்கும் ஏதோ இணைப்பு இருப்பது போலவும் தோன்றுகிறது.

மஹரிஷி திரை விமர்சனம்: விவசாயங்களுக்காக போராடும் ரிஷி