ads
சிவகார்த்திகேயனின் மதராஸி, அமரன் படத்தின் வசூலை முறியடிக்குமா?
ராம் குமார் (Author) Published Date : Aug 30, 2025 14:45 ISTபொழுதுபோக்கு
நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள மதராஸி திரைப்படம், வரும் செப்டம்பர் 5 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. படத்தின் விளம்பரப் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், படத்திற்கு U/A சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.
படத்தின் ஓடிடி மற்றும் சாட்டிலைட் உரிமைகள் தொடர்பாக சில குழப்பங்கள் நிலவி வந்த நிலையில், தற்போது தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளுக்கான உரிமைகளை ஜீ தமிழ் மற்றும் ஜீ தெலுங்கு நிறுவனங்கள் கைப்பற்றியுள்ளன.
இந்த மகிழ்ச்சியான சூழலில், சமூக வலைத்தளங்களில் ரசிகர்கள் மத்தியில் ஒரு முக்கியமான விவாதம் எழுந்துள்ளது. சமீபத்தில் வெளியாகி 300 கோடிக்கும் மேல் வசூல் சாதனை படைத்த அமரன் படத்தின் சாதனையை, மதராஸி முறியடிக்குமா என்பதே அந்த விவாதம்.
டிரெய்லரை மட்டும் வைத்து ஒரு படத்தின் வெற்றியை தீர்மானிக்க முடியாது என்பதால் மதராஸி வெளியான பிறகு, ரசிகர்களின் வரவேற்பைப் பொறுத்தே இந்த கேள்விக்கான விடை தெரியவரும். மதராஸி திரைப்படம் அமரன் படத்தின் வசூலை முறியடித்து புதிய சாதனை படைக்குமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.