love drama action: நயன்தாராவின் புதிய படத்தின் முதல் பார்வை வெளியீடு

லவ் ட்ராமா ஆக்க்ஷன்



கடைசியாக லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாரா இயக்குனர் ராஜேஷ் இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் ஜோடியாக மிஸ்டர்.லோக்கல் படத்தில் திரையில் தோன்றினார். இப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு பெறவில்லை. இதற்கு முன்னதாக நடித்த ஐரா திரைப்படமும் வணிக ரீதியாக தோல்வியை சந்தித்தது. 

சிவா இயக்கத்தில் தல அஜித் நடித்த விஸ்வாசம் மூலம் இந்த ஆண்டின் தொடக்கத்தில் வெற்றி படத்தை கண்டார் நடிகை நயன்தாரா. தற்போது நடித்து வரும் கொலையுதிர் காலம் படம் பதிப்புரிமை சிக்கல்களால் வெளியீடு தேதி இன்னும் அறியாமல் உள்ளது. 

நயன்தாராவின் அடுத்த படமான லவ் ட்ராமா ஆக்க்ஷன் திரைப்படத்தின் முதல் பார்வை இன்று வெளியாகி உள்ளது. மம்முட்டியுடன் புதிய நியமும் படத்திற்கு பிறகு மூன்று வருடங்களுக்கு பின்னர் மலையாள திரைப்படத்தில் தனது பங்களிப்பை அளித்துள்ளார் நடிகை நயன்தாரா.



லவ் ஆக்சன் டிராமாவின் முதல் பார்வை போஸ்டரில் நிவின் பாலி மற்றும் நயன்தாரா ஒருவருக்கொருவர் அருகில் நின்று கொண்டு புன்னகைத்தவாறு தோற்றம் அளிக்கின்றனர். சமூக வலைத்தளங்களில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது இப்படத்தின் போஸ்டர். லவ் ஆக்சன் டிராமா தியான் ஸ்ரீனிவாசனின் இயக்கத்தில் வெளிவரவுள்ளது. மேலும் பிரஜின், தன்யா பாலகிருஷ்ணா ஆகியோர் இப்படத்தில் நடித்துள்ளனர். இப்படம் ஓணம் அன்று வெளியாக உள்ளது. 


Share on:

Latest Post