ads

LIK படத்தின் முதல் க்ளிம்ப்ஸ் வெளியீடு

LIK படத்தின் முதல் க்ளிம்ப்ஸ் வெளியீடு

LIK படத்தின் முதல் க்ளிம்ப்ஸ் வெளியீடு

நடிகர் பிரதீப் ரங்கநாதனின் நடிப்பில் உருவாகி வரும் LIK திரைப்படத்தின் முதல் க்ளிம்ப்ஸ் (First Glimpse) தற்போது வெளியாகி, ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. வித்தியாசமான மற்றும் வெற்றிகரமான படங்களை வழங்கி வரும் பிரதீப், இந்த முறை ஒரு காதல் கதையை கையில் எடுத்திருப்பது இந்த க்ளிம்ப்ஸ் மூலம் உறுதியாகியுள்ளது.

இந்த க்ளிம்ப்ஸ் வீடியோவில், இசையமைப்பாளர் அனிருத்தின் ஆல்பம் பாடல் ஒன்று பயன்படுத்தப்பட்டுள்ளது. அனிருத்தின் இசை, படத்தின் மீதான எதிர்பார்ப்பை பல மடங்கு அதிகரித்துள்ளது என ரசிகர்கள் உற்சாகத்துடன் தெரிவித்து வருகின்றனர்.

'LIK' படம் வருகின்ற அக்டோபர் 17 ம் தேதி வெளியாகும்  என  அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில், பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் உருவாகியுள்ள மற்றொரு படமான  DUDE  திரைப்படமும் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

LIK படத்தின் முதல் க்ளிம்ப்ஸ் வெளியீடு