ads
லியோ படம் மொத்தமே 400 கோடிதான் வருமானமா ?
ராம் குமார் (Author) Published Date : Aug 22, 2025 17:07 ISTபொழுதுபோக்கு
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், நடிகர் விஜய் நடிப்பில் கடந்த 2023 ஆம் ஆண்டு வெளியான 'லியோ' திரைப்படம், அதன் வருவாய் குறித்த புதிய தகவலால் மீண்டும் சமூக வலைதளங்களில் பரபரப்பாக விவாதிக்கப்பட்டு வருகிறது.
திரைப்படம் வெளியாகி மிகப்பெரிய வெற்றியடைந்ததாகக் கூறப்பட்டது. படத்தின் மொத்த வசூல் 600 கோடி என்று விளம்பரப்படுத்தப்பட்டது. ஆனால், அண்மையில் படத்தின் தயாரிப்பாளர் லலித் குமார், வருமான வரித் துறையிடம் சமர்ப்பித்த கணக்கின்படி, படத்தின் மொத்த வசூல் குறித்த அதிர்ச்சியூட்டும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
வருமான வரித் துறைக்கு அளிக்கப்பட்ட ஆவணங்களின்படி, 'லியோ' திரைப்படம் திரையரங்குகளில் மொத்தமாக 160.50 கோடி மட்டுமே வசூலித்துள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. அத்துடன், டிஜிட்டல் உரிமம் (digital rights) 124 கோடிக்கும், இசை உரிமம் (audio rights) 24 கோடிக்கும், இந்தி மொழி உரிமம் (Hindi rights) 24 கோடிக்கும், தென்னிந்திய செயற்கைக்கோள் உரிமம் (South India satellite rights) 72 கோடிக்கும் விற்கப்பட்டுள்ளதாகக் கணக்கு காண்பிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம், படத்தின் மொத்த வருவாய் 404.56 கோடி என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், திரைப்படம் வெளியான முதல் நாளில் 148.5 கோடி வசூல் செய்ததாக முன்னர் விளம்பரப்படுத்தப்பட்டது. ஆனால், வருமான வரித் துறையிடம் தாக்கல் செய்யப்பட்ட கணக்கு, இதற்கு முற்றிலும் மாறுபட்ட தகவலைக் கொண்டிருப்பதால், இது பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.