மறைந்த பாலிவுட் நடிகை படம் சீனாவில் வசூல் சாதனை

 ஸ்ரீதேவி மாம் படம்



ரவி உதயவார் இயக்கத்தில் கிரிஷ் கோஹ்லி எழுத்தால் உருவான ஹிந்தி திரில்லர் திரைப்படம் மாம். மாபெரும் நடிகை ஸ்ரீதேவி நடிப்பில் வெளியான இறுதியான  படம். இந்தியாவில் இப்படம் ஜூலை மாதம் 2017 ஆம் ஆண்டு வெளியானது. இப்படத்தை ரண்ட எலமின் தயாரித்துள்ளார். 

 இப்படத்தில் மறைந்த நடிகை ஸ்ரீதேவி, நவாஸுதின் சித்திக்கி, அக்ஷய் கன்னா, சஜல் அலி போன்றோர் இப்படத்தில் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் 300வது மற்றும் முக்கியமான இறுதியான படம் ஆகும். அவரது இறப்புக்கு முன்பு கடைசியாக நடித்த படம் மாம் ஆகும்.

இப்படம் சீனா வெள்ளி திரையில் மே 10 அன்று வெளியிடப்பட்டது. வெளியான 3 நாளில் 41 கோடியை வசூலித்தது. அந்தாதுன், 3 இடியட்ஸ், தங்கல் போன்ற வெற்றி பட வரிசையில் மாம்மும் இணைந்து கொண்டது. கடல் தாண்டி இந்தியாவில் இருந்து தயாரிக்கப்பட்ட திரைப்படம் பெருமளவில் வரவேற்பை பெற்றுள்ளது.

இப்படத்திற்கு ரஹ்மான் இசை அமைத்துள்ளார். அனை கோஸ்வாமி ஒளிப்பதிவு செய்துள்ளார். காணாமல் போன தன் மகளை தேடும் தாய் சந்திக்கும் சிக்கல்களும் கதையின் கருவாக அமைந்துள்ளது. 

இப்படத்தில் சிறந்த நடிப்பிற்காக மறைந்த நடிகை ஸ்ரீதேவிக்கு தேசிய திரைப்பட விருது, ஜீ பட விருதுகள்,மேலும் பல விருதுகளை பெற்றுள்ளார். மேலும் சிறந்த இசைக்காகவும் பல விருதுகளை பெற்றுள்ளது.

Share on:

Latest Post