அட்டக்கத்தி புகழ் தினேஷ் நாயகனாக நடித்து வெளிவந்துள்ள படம் "இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு" , இந்த படம் இன்று தமிழர்கள் வசிக்கும் அனைத்து நாடுகளிலும் ரிலீசாகி உள்ளது. படத்தின் முதல் காட்சி முடிந்தவுடன் , எந்த நாட்டில் இருந்து எடுக்கப்பட்டது என்று தெரிய வில்லை, இந்த படம் தமிழ் ராக்கர்ஸ் தனது இணையத்தளத்தில் லீக் செய்துள்ளது.

பல படங்களில் தினேஷ் நடித்திருந்தாலும், இவருக்கு எந்த ஒரு படமும் ஒரு பெரிய திருப்பு முனையாக அமையவில்லை. தினேஷ் ஒரு சிறந்த நடிகர் என்பது அவர் நடித்த எல்லா படங்களிலும் இருந்தே தெரிந்து கொள்ளலாம். இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு படம் கண்டிப்பாக ஒரு திருப்பு முனையாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இயக்குனர் ரஞ்சித் தயாரிக்கும் இந்த படத்தில், வழக்கம் போல அடித்தட்டு மக்களின் வாழ்க்கையை மைய படுத்தி, காதல் , போராட்டம் கலவரம் போன்ற காட்சிகள் இடம் பெற்றுள்ளது. ஒரு பெரிய குண்டு இவர்களுக்கு கிடைக்கிறது, இந்தத் மிக பெரிய குண்டு இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு என தெரிய வருகிறது.

இந்த குண்டு விஷமிகளின் கையில் கிடைக்காமல் இருப்பதற்காகவும், வெடிக்காமல் இருக்க கதையின் நாயகன் தினேஷ் எடுக்கும் பல்வேறு முயற்சிகளை அழகாக இயக்கியுள்ளார் இயக்குனர் அதியன் ஆதிரை.

இதுபேன்ற படங்களை மக்கள் திரையரங்கில் பார்த்தால் சிறப்பாக இருக்கும். புது படங்களை இணையத்தில் பார்த்தால், இசை மற்றும் கிராபிக்ஸ் போன்ற தொழில்நுட்பங்களை பார்க்க முடியாது.