விஜய் தேவரகொண்டாவின் கிங்டம் திரைப்படம் நாளை திரையரங்குகளில் வெளியாகிறது


இயக்குனர் கெளதம் தின்னனூரி இயக்கத்தில் உருவாகியுள்ள நடிகர் விஜய் தேவரகொண்டாவின் கிங்டம் திரைப்படம் நாளை (ஜூலை 31, 2025) திரையரங்குகளில் வெளியாகிறது. ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இந்தத் திரைப்படம் ஒரு மாபெரும் வெற்றிப்படமாக அமையும் என பலரும் கூறி வருகின்றனர்.

மூன்று நாட்களுக்கு முன்பு வெளியான கிங்டம் திரைப்படத்தின் ட்ரெய்லர் ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது. இதுவரை தமிழ் சினிமாவில் ஒரு ரொமான்டிக் ஹீரோவாக அறியப்பட்ட விஜய் தேவரகொண்டா, இத்திரைப்படத்தில் முற்றிலும் மாறுபட்டு ஒரு அதிரடி ஆக்‌ஷன் ஹீரோவாக நடித்துள்ளார். அவரது இந்த புதிய பரிணாமம் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

இப்படத்தின் இசையமைப்பாளர் அனிருத், யாரும் எதிர்பாராத வகையில் மிக அற்புதமாக இசையமைத்துள்ளதாக ரசிகர்கள் மத்தியில் பேசப்பட்டு வருகிறது. அவரது இசை படத்தின் விறுவிறுப்புக்கு மேலும் வலு சேர்க்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

நாளை வெளியாகும் கிங்டம் திரைப்படம், ரசிகர்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்து ஒரு மாபெரும் வெற்றிப்படமாக அமையுமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Share on:

Latest Post