ads

கீ படத்தின் திரைவிமர்சனம்: தொழில்நுட்ப ரகசியங்களை போட்டுடைக்கும் படம்

கீ திரைவிமர்சனம்

கீ திரைவிமர்சனம்

நடிகர்கள் – ஜீவா, நிக்கில் கல்ராணி, ஆர்.ஜே.பாலாஜி, அனைகா சோதி

தயாரிப்பு – குளோபல் என்டர்டெய்ன்மென்ட்

இயக்கம் – காளிஸ்

படத்தின் நீளம் – 2 மணி நேரம் 22 நிமிடம்

கதை சுருக்கம்: சூப்பர் கம்பியூட்டர் ஹேக்கரான ஜீவாவிற்கு மிக பெரிய அதிரிச்சி தரும் செய்தி ஒன்று தெரிய வருகிறது, அது இன்னொரு கம்பியூட்டர் ஹேக்கர் தனது நெருக்கமான உறவுகளின் கம்பியூட்டர் மற்றும் மொபைகளை ஹேக் செய்து அவர்களை தன்வசப்படுத்தி கொலை செய்ய முயற்சிக்கிறார் என்று. இன்னும் சிம்பிளாக சொல்ல வேண்டும் என்றால் ஒரு கெட்ட ஹேக்கரிடம் இருந்து மக்களை ஒரு நல்ல ஹேக்கர் காப்பாற்றுகிறார் அவ்வளவு தான்.

ஏற்கனவே தமிழ் சினிமாவில் சைபர் ஹேக்கிங்கை மையப்படுத்தி விஷால் நடிப்பில் “இரும்பு திரை” என்ற படம் வெளியானது. ஆனால் இரும்பு திரை படம் அளவிற்கு “கீ” படம் ரசிக்கும் படியாக இல்லை என்று தான் கூறவேண்டும். இயக்குனர் எடுத்துக்கொண்ட கருத்து நன்றாக இருந்தாலும், கூறவேண்டிய கருத்தை தெளிவாக கூறவில்லை இயக்குனர் காளிஸ். விமர்சனம் - கதையின் நாயகனான சித்தார்த் (ஜீவா) என்கின்ற ஒரு இளைஞன், சூப்பர் கம்பியூட்டர் ஹேக்கர் ஆக இருக்கிறார், அவரது வாழ்க்கை சந்தோஷமாக சென்று கொண்டு இருக்கிறது. ஜீவாவின் அப்பாவாக ராஜேந்திர பிரசாத்து, அம்மாவாக சுஹாசினியும் வருகின்றனர்.

ஒரு எதிர்ப்பாராத சம்பவத்தால் இன்னொரு ஹேக்கர் ஆன கோவிந்த் பத்மசூர்யாவை சித்தார்த் (ஜீவா) பார்க்க நேரிடுகிறது. கோவிந்த் பத்மசூர்யா ஒரு கெட்ட ஹேக்கர் என தெரிந்து கொள்கிறார் சித்தார்த் (ஜீவா). ஹேக்கிங்கை பயன்படுத்தி மக்களை தனக்கு இரையாகிக் கொள்கிறார் கோவிந்த் பத்மசூர்யா என்று சித்தார்த்திற்கு (ஜீவா) தெரியவருகிறது. அதில் இருந்து கெட்டதை நல்லது எப்படி ஜெய்கின்றது என்பது தான் கதை. கம்பியூட்டர், மொபைல், இன்னும் சில எலக்ட்ரானிக் போர்ட்களை உபயோகப்படுத்தி வில்லன் சாதாரண மக்கள் சிலரின் வாழ்க்கையில் விளையாடுகிறான். மனதளவில் பலவீனமான மக்கள் எவ்வாறு இந்த மாதிரியான சில தவறுகளுக்கு இரையாகிறார்கள் என்பதை இயக்குனர் காளிஸ் தெளிவாக கூறியுள்ளார்.

எல்லா தமிழ் படங்களிலும் வருகின்ற காதல் கதையையும் காமெடி சீன்களையும் இந்த படத்தில் கஷ்ட்டப்பட்டு புகுத்தி குழம்பி உள்ளனர் இயக்குனர். படத்தின் முக்கியமான காட்சிகள் மனதை தொடும் அளவிற்கு உருவாகப்படாதது படத்தின் மிகப்பெரிய மைனஸாக இருக்கிறது. படத்தினுடைய கதை கரு நன்றாக உள்ளது. படத்தின் கதாநாயகன் ஜீவா மற்றும் வில்லன் கோவிந்த் பத்மசூர்யா நன்றாக நடித்து உள்ளனர். இந்த படத்திற்கு காதல் காட்சி தேவையில்லை என்று தான் தோன்றுகிறது. கூறவந்த கதையில் மட்டும் கவனம் செலுத்தி, உருக்கமான காட்சிகள் மனதை தொடும் அளவிற்கு உருவாக்கி இருந்தால் படம் இன்னும் நன்றாக இருந்திருக்கும் என்று தோன்றுகிறது.

கீ படத்தின் திரைவிமர்சனம்: தொழில்நுட்ப ரகசியங்களை போட்டுடைக்கும் படம்