ads

தமிழ் ராக்கர்ஸ்: "அவெஞ்சரஸ்" படத்தையே லீக் செய்தவர்களுக்கு "கீ" எம்மாத்திரம்?

கீ திரைப்படத்தின் போஸ்டர்

கீ திரைப்படத்தின் போஸ்டர்

தமிழ் ராக்கர்ஸ்: தமிழ் சினிமாவில் மாறுபட்ட கதை களத்தை தேர்ந்தெடுத்து நடிப்பதில் வல்லவர் நடிகர் ஜீவா அவர்கள். நடிப்பில் இளைய தளபதி விஜய் அவர்களை தனது மானசீக குருவாக ஏற்றுகொண்ட நடிகர் ஜீவா தற்பொழுது இயக்குனர் ரத்ன சிவா அவர்களது இயக்கத்தில் "சீறு" என்ற படத்தில் நடித்து வருகிறார். 

இந்த "கீ" திரைப்படம் மூன்று விதமான வீடியோ தரத்தில் "தமிழ் ராக்கர்ஸ்" இணையத்தில் லீக்காகி உள்ளது. திரையரங்கங்களில் வெளியாகும் புதிய திரைப்படங்களை திருட்டுத்தனமாக வீடியோ எடுத்து அதை இணையத்தில் பதிவிட்டு பெரிய லாபத்தை பார்த்து வருகின்றனர் சிலர். அதில் உலக அளவில் பிரபலமாக இருக்கும் ஒரு இணையதளம் என்றால் அது "தமிழ் ராக்கர்ஸ்" இணையதளம் தான். ஹாலிவுட் படமான "அவெஞ்சரஸ்" படத்தையே இணையத்தில் வெளியிட்ட இவர்களுக்கு நமது தமிழ் சினிமாவில் நல்ல நடிகராகவும், தயாரிப்பாளராகவும் இருக்கும் ஜீவா நடித்த "கீ" படம் எம்மாத்திரம்.

ஜீவா நடிப்பில் முழுமை அடைந்த "ஜிப்ஸி" மற்றும் "கொரில்லா" ஆகிய படங்கள் ரிலீஸுக்கு ரெடியாகிக் கொண்டிருக்கும் இந்த நிலையில் அவர் ஏற்கனவே நடித்த "கீ" படம் தற்பொழுது திரைக்கு வந்துள்ளது. நேற்று (10/05/2019) வெளியான இந்த "கீ" திரைப்படம் "சைபர் கிரைம்" போன்ற குற்றங்களை மையமாக வைத்து உருவாக்கப்பட்ட "சைன்ஸ் ஃபிக்ஷன்" படம் என்பது குறிப்பிடத்தக்கது. 

நம்ப முடியாத காரணங்களையும் விளைவுகளையும் படத்தில் சொல்லியிருப்பதால் வெகுஜன ரசிகர்களை ஈர்க்க படம் தவறிவிட்டது. இயக்குனர் கலீஸ் இயக்கத்தில் இசையமைப்பாளர் விஷால் சந்திரசேகர் இசையமைப்பில் உருவாகி உள்ள இந்த படத்தில் நிக்கி கல்ராணி, அனைகா சோதி, ஹீரோயின்களாக நடித்துள்ளனர். நடிகர் ஆர்.ஜே.பாலாஜி காமெடியனாக இந்த படத்தில் நடித்துள்ளார். 

இந்த படத்தின் ட்ரைலர் ஏற்கனவே யூடியூப் சேனலில் வெளியாகி ரசிகர்களை கவர்ந்து இரண்டு மில்லியன் பார்வையாளர்களை பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது. நடிகர் சிம்பு நடித்த "அன்பானவன் அசராதவன் அடங்காதவன்" படத்தை தயாரித்த மைக்கல் ராயப்பன் இந்த படத்தை தயாரித்துள்ளார். சிம்புவின் அன்பானவன் அசராதவன் அடங்காதவன் படத்தின் தோல்வி காரணங்களாக இந்த படத்தின் ரிலீஸ் தேதி தள்ளிப்போனது.

தமிழ் ராக்கர்ஸ்: "அவெஞ்சரஸ்" படத்தையே லீக் செய்தவர்களுக்கு "கீ" எம்மாத்திரம்?