ads

உங்களுக்கு தெரியுமா? நம்ம காஜல் அகர்வாலின் முதல் படம் இதுதான்

காஜல் அகர்வாலின் முதல் படம்

காஜல் அகர்வாலின் முதல் படம்

தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வளம் வருபவர் நடிகை காஜல் அகர்வால். ஆரம்ப காலங்களில் இவருக்கு அதிக விசிறிகள் இல்லை என்றாலும் தனது அசத்தலான நடிப்பினாலும், கவர்ச்சியினாலும் தென்னிந்திய ரசிகர்கள் மனதில் நிரந்தர இடம் பிடித்து குடிகொண்டுள்ளார். "லேட்ட வந்தாலும் லேட்டஸ்டா தான் வருவேன்" என்ற சூப்பர் ஸ்டாரின் வசனம் போல தாமதமாக பிரபலமானாலும் யாராலும் அசைக்க முடியாத இடத்தை தற்பொழுது தக்கவைத்து கொன்டுள்ளார் நடிகை காஜல் அகர்வால். "இளைய தளபதி" விஜய், "தல" அஜித் குமார் என எல்லா தமிழ் முன்னணி நடிகர்களுடனும் ஜோடி சேர்ந்த நடிகை காஜல் அகர்வால் தற்பொழுது இயக்குனர் ஷங்கர் அவர்கள் இயக்கி வரும் "இந்தியன் 2" படத்தில் உலக நாயகன் திரு.கமல் ஹாசன் அவர்களுக்கு ஜோடியாக நடித்து வருகிறார். 

காஜல் அகர்வால் முதல் முறை கதாநாயகியாக நடித்த திரைப்படம் தெலுங்கு திரைப்படமான "லக்ஷ்மி கல்யாணம்" என்ற படம் தான். இந்த படம் கடந்த 2007 ஆம் ஆண்டு வெளியாகி சுமாரான ஹிட் படமானது. பிறகு இயக்குனர் பேரரசு அவர் நடிகர் பரத்தை வைத்து இயக்கிய "பழனி" என்ற படத்தில் காஜல் அகர்வாலை நடிக்க வைத்து தமிழுக்கு அறிமுகப்படுத்தினார். அதன் பிறகு சில தமிழ் மற்றும் தெலுங்கு படங்களில் நடித்து வந்த காஜலுக்கு அடித்தது "மகாதீரா" என்ற ஜாக்பாட். இயக்குனர் ராஜமௌலி இயக்கத்தில் உருவான இந்த படத்தில் ராம் சரணுக்கு கதாநாயகியாக நடித்தார் காஜல். அந்த படம் சூப்பர் டூப்பர் ஹிட்டடிக்க எகிறியது காஜல் அகர்வாலின் ஸ்டார் வேல்யு. 

தமிழை விட தெலுங்கில் அடுத்தடுத்த புதிய படங்களில் நடித்து வரும் காஜல் அகர்வால் ஹிந்தி திரைப்படங்களிலும் நடித்து வருகிறார். இத்தனை புகழ் பெற்ற காஜல் அகர்வால் எடுத்ததும் கதாநாயகி வேடத்தில் நடித்து பிரபலமாகவில்லை ஆரம்ப காலங்களில் ஹீரோயினுக்கு தோழியாக நடித்து படிப்படியாக முன்னேறி சினிமாத்துறையில் சாதித்துள்ளார். இவர் முதன் முதலில் திரையில் தோன்றிய திரைப்படம் பாலிவுட் திரைப்படமான "கியூன் ஹோ கயா நா" என்ற படத்தில் தான். 

இந்த படம் கடந்த 2004 ஆம் ஆண்டு வெளியானது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தை இயக்குனர் "சமீர் கார்னிக்" இயக்கி இருந்தார். படத்தில் அமிதாப்பச்சன் ஒரு முக்கிய வேடத்தில் நடித்திருந்தார். கதையின் நாயகனாக நடிகர் விவேக் ஓபராய், கதாநாயகியாக நடிகை மற்றும் முன்னாள் உலக அழகி ஐஸ்வர்யா ராய் நடித்திருந்தனர். ஐஸ்வர்யா ராய்க்கு தோழியாக நடித்திருந்தார் காஜல் அகர்வால். மேலும் ஒரு பாடலுக்கு உலக அழகியுடன் சேர்ந்து நடனமும் ஆடியிருப்பார் நம்ம காஜல் அகர்வால். அந்த பாடல் இன்றும் பாலிவுட் திரைத்துறையில் சூப்பர்-ஹிட் பாடலாக இருந்து வருகிறது.

உங்களுக்கு தெரியுமா? நம்ம காஜல் அகர்வாலின் முதல் படம் இதுதான்

கியூன் ஹோ கயா நா படத்தில்

உங்களுக்கு தெரியுமா? நம்ம காஜல் அகர்வாலின் முதல் படம் இதுதான்