அருள்நிதி நடிப்பில் இன்று திரையில் வெளியாகி இருக்கும் படம் K -13. இது ஒரு திரில்லர் திரைப்படம். புதுமுக இயக்குனர் பரத் நீலகண்டன் இயக்கியுள்ளார். இந்த படத்திற்கு சாம் இசை அமைத்துள்ளார். விக்ரம் வேதா திரைப்படம் மூலம் பிரபலமடைந்த கதாநாயகி சாராத ஸ்ரீநாத் இதில் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார், மற்றும் நகைச்சுவை நடிகர்கள் யோகி பாபு, ரமேஷ் திலக் நடித்துள்ளனர்.

சன் பிக்சர்ஸ் நிறுவனம் வெளியிட்ட காஞ்சனா 3 திரைப்படம் அதிக திரையரங்குகளில் வெளியாகி இருந்தது, படத்திற்கு நல்ல வரவேற்பு இருந்தாலும் மூன்றாம் வாரத்தில் எதிர்பார்த்த கூட்டம் இல்லை. இந்நிலையில் நேற்று வெளியான தேவராட்டம் திரைப்படம் வெளியான திரையரங்குகளில் முதல் நாள் நான்கு காட்சிகள் ஓடிய நிலையில், சில திரையரங்குகளில் இன்று முதல் இப்படத்தை காலை இரண்டு காட்சிகள் திரையிடப்பட்டு, மாலை மற்றும் இரவு காட்சிகளில் K -13 திரையிட்டுள்ளனர்.

பொதுவாக மூன்றாவது வாரத்தில் பெரிய படங்கள் சரியாக போகவில்லை என்றால், அடுத்து வரவிருக்கும் படங்கள் பெரிய திரைக்கு மாற்றப்படும், நன்றாக ஓடிமுடிந்த படங்கள் வெளியே செல்லும் அல்லது, சிறிய திரைக்கு செல்லும். அப்படி நடக்காமல் போனது, தேவராட்டம் திரைப்படத்திற்கு சற்று பின்னடைவு.