ads
ஜூன் மாத கோலிவுட் ரிலீஸ்: கவனத்தை ஈர்க்கும் தமிழ் படங்கள் 2019
ஹரிணிஶ்ரீ (Author) Published Date : Jun 03, 2019 18:08 ISTபொழுதுபோக்கு
கொலைகாரன்: ஜூன் 7
ரம்ஜான் தினத்தன்று வெளியாகவிருக்கும் விஜய் அந்தோணி மற்றும் அர்ஜுன் இணைந்து நடிக்கும் திரில்லர் திரைப்படம் மக்களால் வெகுவாக எதிர்பார்க்கப்படுகிறது. புதுமுக இயக்குனர் பிரதீப் இயக்கும் இப்படம் ட்ரைலர் மற்றும் டீஸர் எதிர்பார்ப்பை கூட்டியுள்ள நிலையில் படம் வெகுநாளுக்கு பிறகு விஜய் அந்தோணி மற்றும் அர்ஜுனுக்கு நல்ல வரவேற்பை தரும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் விடுமுறை நாள் அன்று வெளியாவதால் படத்திற்கு நல்ல விமர்சனம் கிடைத்தால் வெற்றிபெறும் வாய்ப்பு அதிகமாக உள்ளது.
கொலையுதிர் காலம்: ஜூன் 14
நயன்தாரா நடித்து வெளிவரவிருக்கும் ஹாரர் திரைப்படம் இயக்குனர் சக்ரி டூலெட்டியால் இயக்கப்பட்டு ஜூன் 14 அன்று உலகமெங்கும் வெளியாகவுள்ளது. ஹிந்தியில் கமோஷி என்ற பெயரில் தமன்னாஹ் மற்றும் பிரபு தேவா நடிப்பில் வெளிவரவிருக்கும் இதே படம் ஹாரர் ரசிகர்களிடயே பெரும் எதிர்பார்ப்பை பெற்றுள்ளது. நயந்தாராவின் முந்தய படமான ஐரா தோல்வியுற்ற நிலையில் மிகுந்த தாமதத்திற்கு பிறகு கோலையுதிர் காலம் வெளியாவதால் பெரும் எதிர்பார்ப்பை கொண்டுள்ளத்து.
கேம் ஓவர்: ஜூன் 14
தப்சீ பண்ணு நடிப்பில் வித்தியாசமான கதைக்களத்தில் வரவிருக்கும் கேம் ஓவர் திரைப்படம் தமிழ், தெலுங்கு மற்றும் ஹிந்தியில் வெளியாக உள்ளது. இதுவும் ஹாரரை மையமாக கொண்டு கொலையுதிர் கால வெளியாகும் அதே நாளில் வெளியாவதால் போட்டி கடுமையாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும் இரு படங்களும் ரசிக்கத்தக்க கதைக்களத்தை கொண்டிருப்பதால் மக்களின் வரவேற்பை பெற்று வெற்றி பெரும் வாய்ப்புகள் மிகுதியாக உண்டு.
பக்கிரி: ஜூன் 21
தனுஷின் ஹாலிவுட் திரைப்படமான தி எக்ஸ்ட்ராடினரி ஜர்ணி ஆப் பக்கிர் திரைப்படத்தின் தமிழ் மொழியாக்கமான பக்கிரி ஜூன் 21 அன்று இந்தியாவில் வெளியாக உள்ளது. ரஷ்யா, ஐரோப்பா மற்றும் உலகம் முழுவதும் சுற்றி எடுக்கப்பட்ட இப்படம் தனுஷின் ஹாலிவுட் என்ட்ரியை குறிப்பதால் பலத்த எதிர்பார்ப்புடன் வெளியாகி இந்திய பாக்ஸ் ஆஃபீசை அசத்த காத்திருக்கிறது
சிந்துபாத்: ஜூன் 21
அதே தேதியில் வெளியாகவிருக்கும் விஜய் சேதுபதியின் சிந்துபாத் திரைப்படம் கொரியாவை மையமாக கொண்டு ஆக்ஷன் திரில்லர் படமாக உருவெடுத்துள்ளது. படத்தின் ட்ரைலர் வேறுபட்ட ஒரு சாயலை காட்டியதால் மேலும் விஜய் சேதுபதி படம் என்பதால் படத்தில் ரசிக்கத்தக்க வேறுபட்ட கதைக்களம் மற்றும் காட்சிக இருக்கும் என்று அனைவரும் காத்திருக்கின்றனர். ஏற்கனவே சேதுபதியை வைத்து இயக்கி ஹிட் அடித்த அருண் குமார் படத்தை