ads

ஜீவா நிக்கி கல்ராணியின் கீ படத்தின் திரை விமர்சனம்

ஜீவா நிக்கி கல்ராணியின் கீ

ஜீவா நிக்கி கல்ராணியின் கீ

தொழில்நுட்ப கதையை மையப்படுத்தி எடுக்கப்படும் படங்களுக்கு என்றே தனியாக ஒரு ரசிகர் பட்டாளமே உண்டு. ஏனெனில், இது போன்ற படங்களில் தான், புதுமையான விஷயங்களை  தெரிந்து கொள்ள இயலும் என்று ஆவலுடன் வருவார்கள். அவ்வகையில், 2018ஆம் ஆண்டு மே மாதம் வெளியான இரும்புத்திரை படம் டிஜிட்டல் உலகத்தையும் ஹாக்கிங்கையும் மையப்படுத்தி வெளிவந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

விஷாலின் கேரியரில் இந்தப் படம் ஒரு மைல் கல்லாக அமைந்தது. இரும்புத்திரை வருவதற்கு முன்பாகவே, கீ படத்தின் ட்ரைலர் ஜனவரி 2018 லேயே வெளியிடப்பட்டது. ஆனால், படம் இன்று தான் வெளிவருகிறது. எனினும், தற்போது வரை, கீ படத்தின் ட்ரைலரை ரசிகர்கள் சலிக்காமல் பார்த்துக் கொண்டு தான் இருக்கிறார்கள்.

காத்திருந்த ரசிகர்களுக்கு விருந்து படைக்கும் விதமாக, லேட் ஆனாலும் லேட்டஸ்ட் ஆக வந்திருக்கிறது.  சமீபத்தில் வெளியான இப்படத்தின் ஸ்னீக் பீக் காட்சிகள் ரசிகர்களைக் கவரும் வண்ணமும் எதிர்பார்ப்பை மேலும் தூண்டும் விதத்திலும் அமைந்திருக்கின்றன. இயக்குனர் செல்வராகவனிடம் உதவி இயக்குனராக இருந்த காளீஸ் என்ற புதுமுக இயக்குனர், இப்படத்தைத் இயக்கி இருக்கிறார்.

இதற்கு முன்பாக, கலகலப்பு 2 படத்தில் ஜீவாவுடன் நிக்கி கலராணி இணைந்து நடித்துள்ளார். ஆனால், ஜோடியாக நடிக்கவில்லை. ஆனால், இப்படத்தில், ஜீவாவிற்கு ஜோடியாக நடித்திருக்கிறார். மேலும்,  அனிகா சோடி, ஆர்.ஜே. பாலாஜி, ராஜேந்திர பிரசாத், சுஹாசினி, மனோபாலா, மீரா கிருஷ்ணன் என பல நடிகர்கள் இப்படத்தில் இடம் பெற்றுள்ளனர்.

விஷால் சந்திரசேகர் இசையில், அபிநந்த ராமானுஜம் ஒளிப்பதிவில்,  மைக்கேல் ராயப்பன் தயாரிப்பில் வெளிவந்திருக்கும் படம் தான் "கீ". நீண்ட நாட்களாக, ஒரு மகத்தான வெற்றியை எதிர்நோக்கி காத்திருக்கும் ஜீவாவிற்கு  "கீ" படம் ஒரு திருப்புமுனையாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. படத்தின்  ரிலீஸ் தேதி தள்ளிப்போடப்பட்ட நிலையில் கூட படத்திற்கான எதிர்பார்ப்பு மேலும் கூடிக்கொண்டு தான் இருந்தது. தொழிநுட்பம் சார்ந்த த்ரில்லர் படமான "கீ" யில் ஹேக்கிங் திறமைகளைக் கொண்டுள்ள  கல்லூரி மாணவன் கதாபாத்திரத்தில் ஜீவா கச்சிதமாக பொருந்துகிறார். நிக்கி கலராணிக்கும் ஜீவாவிற்கும் மோதலில் ஆரம்பித்து காதலில் முடியும் வண்ணம் திரைக்கதை அமைக்கப்பட்டிருக்கிறது. ஒரு பத்திரிகையாளரின் பாத்திரத்தில் அனிகா சோடி நடித்திருக்கிறார்.

தொழில்நுட்பத்தின் எதிர்மறை பக்கத்தை வெளிச்சம் போட்டு காட்டி இருக்கிறது, கீ படம்.  சமூக ஊடக தளங்களுக்கு மக்கள் அடிமையாக இருப்பதால் தினசரி நடவடிக்கைகளையும் நம்மையும்  எவ்வாறு பாதித்திருக்கிறது என்பதே படத்தின் கரு. ஆனால், இயக்குனர் காட்ட முயற்சித்ததில்  தடுமாறி இருக்கிறார். ஏனெனில், படத்தின் காட்சிகள் பெரிதளவில் தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. தீவிரமான காட்சிகள் கூட வேடிக்கையாக அமைக்கப்பட்டிருக்கிறது.

பாடல்கள் சோபிக்கவில்லை. ஆனால், பிஜிம், சவுண்ட் எபக்ட்ஸ் நன்றாக இருக்கிறது.  படத்தில், நகைச்சுவை வசனங்கள் இருக்கின்றன. ஆனால், நகைச்சுவை காட்சிகள் பெரிதான தாக்கத்தை ஏற்படுத்தத் தவறி விட்டன. படத்தில் சென்டிமென்ட், க்ளெமர், ரோமேன்ஸ் என இவைகள் யாவும்  ஒர்க் அவுட் ஆக வில்லை. வில்லனின் நடிப்பு பாராட்டுக்குரியது. படத்தில் இது போன்ற குறைகள் தென்பட்டாலும் படத்தின் முதல் பாதையில் சில சுவாரசியமான காட்சிகளும் இடம் பெற்றிருக்கின்றன. எனினும், படத்தின் எதிர்பார்ப்புகளுக்கு சரியான தீனி போட வில்லை என்றே சொல்ல வேண்டும். 

படம் பார்த்து வெளிவந்த ரசிகர்களைக் கேட்ட போது, படத்தின் கரு நன்றாக இருக்கிறது. ஆனால், படத்தின் இயக்குனர் இதை சரியாக கையாண்டிருக்க வேண்டும். படத்தை மசாலா பாணியில் கமர்ஷியலாக்கி இருக்க வேண்டாம், கருத்தை நோக்கியே படத்தை நகர்த்தி இருந்தால் படம் இன்னும் நன்றாக இருந்திருக்கும் என்கிறார்கள். டிஜிட்டல் உலகில் தொழில்நுட்பத்தை எவ்வாறு பயன்படுத்த வேண்டும் என்ற எச்சரிக்கையை மெசேஜாக  சொல்லி இருக்கிறார்கள். அதற்காக, ஒரு முறை படத்தைப் பார்க்கலாம் என்று ரசிகர்கள் கூறுகிறார்கள்.

ஜீவா நிக்கி கல்ராணியின் கீ படத்தின் திரை விமர்சனம்