ads

ஐ வில் மிஸ் யூ டியர்லி- த்ரிஷாவை சோகமயமாக்கியது இதுதான்

த்ரிஷா

த்ரிஷா

தமிழ் திரையுலகில் மீண்டும் தனது இன்னிங்க்ஸ்சை தொடர்ந்துள்ளார் நடிகை த்ரிஷா. இன்றும் இவர் மேல் பலர் பைத்தியமாக இருக்கின்றனர். நடிகர் விஜய் சேதுபதியுடன் இவர் இணைந்து நடித்த 96 திரைப்படத்தில் ஜானு என்ற கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். அவரை விட அந்த கதாபாத்திரத்தை வேறு யாராலும் அவ்வளவு நேர்த்தியாக நடித்திருக்க முடியாது என்கின்றனர் த்ரிஷா ரசிகர்கள். அதன் பிறகு சூப்பர் ஸ்டாருடன் பேட்ட தற்பொழுது பரமபதம் விளையாட்டு ராங்கி’ என இரு புதிய படங்களிலும் மற்றொரு பெயரிடப்படாத புதிய படத்திலும் நடித்து வருகிறார் த்ரிஷா.

இவர் ஏற்கனவே நடித்து முடித்த சந்துரங்க வேட்டை 2 மற்றும் கர்ஜனை படங்கள் இன்றும் வெளிவராமல் இருப்பது குறிப்பிடத்தக்கது. நடிகை த்ரிஷா சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், உலக நாயகன் கமல் ஹாசன், இளைய தளபதி விஜய் மற்றும் தல அஜித், சூர்யா, விக்ரம், விஷால், தனுஷ், சிம்பு என பெரும்பாலும் எல்லா தமிழ் முன்னணி நடிகர்களுடனும் நடித்து விட்டார். மேலும் ஹிந்தி படங்களிலும், தெலுங்கு மற்றும் மலையாளத்திலும் அடித்துள்ளார். தனது சினிமா பயணத்தில் இருபது வருடங்களை கடந்துவிட்ட நடிகை த்ரிஷா அன்று பார்த்தது போலவே இன்று இளமையுடனும், கம்பீரத்துடனும் இருக்கிறார். ஆனால் அவரது கம்பீரத்தை குலைத்துள்ளது ஒரு பிரபல தொலைக்காட்சி நிகழ்ச்சியின் இறுதி பாகம். ஆம் அது பிரபல ஆங்கில வெப் சீரிஸ் ஆன கேம் ஆஃப் த்ரோன்ஸ் தான் அந்த தொடர்.

உலகில் இதுவரை தயாரிக்கப்பட்ட சின்னத்திரை தொடர்களிலேயே மிகவும் பிரமாண்ட பொருட்செலவில் உருவாக்கப்பட்ட தொடர் இந்த கேம் ஆஃப் த்ரோன்ஸ் தான். இந்த தொடரின் இறுதி பாகமான எட்டாவது சீசன் வெளியாகி உலக ரசிகர்களை ஈர்த்து வருகிறது. நடிகை த்ரிஷாவும் இந்த சீரிஸின் பரம ரசிகை போலும். இந்த சீரஸ் முடிவிற்கு வந்ததை எண்ணி மிகவும் சோகமயமான ஒரு ட்விட்டர் பதிவை பதிவிட்டுள்ளார். அந்த பதிவில் இந்த தொடர் மிகவும் பாராட்டக்கூடிய தொடராக இருக்கிறது, சிறந்த நடிகர்கள், கலைஞர்கள் கொண்ட நிகழ்ச்சி இது. இந்த நிகழ்ச்சியின் காட்சி அமைப்பு, நடிகர்களின் நடிப்பு, பின்னணி இசை, திரைக்கதை எழுதிய விதம் என அனைத்தும் அற்புதமாக இருக்கும். கேம் ஆஃப் த்ரோன்ஸ், ஐ வில் மிஸ் யூ டியர்லி என்று பதிவிட்டுள்ளார்.

ஐ வில் மிஸ் யூ டியர்லி- த்ரிஷாவை சோகமயமாக்கியது இதுதான்