ads

ஹ்ரிதிக் ரோஷன் சூப்பர் 30 திரைப்பட ரிலீஸ் தேதி அதிகாரப்பூர்வ அறிவிப்பு

ஹ்ரிதிக் ரோஷன் சூப்பர் 30

ஹ்ரிதிக் ரோஷன் சூப்பர் 30

பாலிவுட்  நடிகர் ஹ்ரிதிக் ரோஷன் நடித்த சூப்பர் 30 படத்தின் வெளியீட்டு தேதி இறுதியாக முடிவு செய்யப்பட்டது. ஜூலை 12 ம் தேதி வெளியிடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

முதலில் ஜூலை 26 அன்று சூப்பர் 30 வெளியிட முடிவு செய்த நிலையில், நடிகை கங்கனா ரணவட் நடித்த  மென்டல் ஹாய் க்யா படம் வெளியிடப்படுவதாக அறிவிப்பு வெளிவந்தது. தேவை இல்லாத மோதல்களை தவிர்ப்பதற்காக ஹ்ரிதிக் தயரிப்பாளர்களிடம் பட வெளியிட்டு தேதியை ஒத்தி வைக்குமாறு அறிவுரைத்தார்.

ரிலையன்ஸ் என்டர்டெயின்மென்டின் தலைமை நிர்வாக அதிகாரியான ஷிபஷிஷ் சர்க்கார், ஜூலை 12, 2019 அன்று  'சூப்பர் 30' என்று வெளியாகும் என்று தனது ட்விட்டர் பக்கத்தில் ட்வீட் செய்துள்ளார். படம் ஒன்று அல்லது இன்னொரு காரணத்திற்காக தாமதமாக வருகிறது என்றார்.

முன்னதாக, சூப்பர் 30 ஜனவரி 25 அன்று வெளியாக இருந்த நிலையில் நடிகை கங்கனாவின் மணிகர்னிகா: ஜான்சி ராணி வெளியிடப்பட்டது.

பீகாரில் ஐஐடி-ஜேஇஇ மாணவர்களுக்கு பயிற்சியளிக்கும் கணிதவியலாளர் ஆனந்த் குமாரின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டது சூப்பர் 30. இயக்குனர் விகாஸ் பாலின் பெயர் #me too வில் வெளிவந்ததால்  தயாரிப்பிற்குப்பின் உள்ள வேலைகள் நிலுவையில் நின்றது.

பின்னர், அது ஜூலை 26 வெளியீட்டிற்காக மாற்றியமைக்கப்பட்டது.  ஆனால் கங்கனாவின் மென்டல் ஹே க்யா வெளியாகிய நிலையில், சூப்பர் 30 வெளியிட்டு நாள்  தயாரிப்பாளர்கள் மாற்றி வைக்க முடிவு செய்தனர்.

நடிகர் ஹ்ரிதிக் வெளியிட்ட அறிக்கையில், ஊடக சர்ச்சைகளால் என் படம் வீழ்ச்சி காண்பதை நான் விரும்பவில்லை ஆதனால் என் படம் சூப்பர் 30 படத்தின் வெளியீடடு தேதியை மாற்றிஉள்ளேன். தனிப்பட்ட முறையை எவ்வித அதிர்ச்சிகளையும் ஏற்று கொள்ள நிலையில் இல்லை என்று கூறினார்.

படம் தயாரா இருந்த போதிலும்,  தயாரிப்பாளர்கள் வேறு பொருத்தமான தேதியை மாற்றி, படம் வெளியிட  வேண்டுமென்றும் நடிகர் கேட்டுக் கொண்டார். கடந்த காலத்தில் கங்கனா  தனிப்பட்ட மோதல் கொண்தால் இவ்வாறான முடிவுகளை எடுத்துள்ளார்.

ஹ்ரிதிக் ரோஷன் சூப்பர் 30 திரைப்பட ரிலீஸ் தேதி அதிகாரப்பூர்வ அறிவிப்பு