ads

வெளியானது இனம், மொழி, காதல், பேசும் ஜிப்ஸி படத்தின் புதிய ட்ரைலர்

ஜிப்ஸி ட்ரைலர்

ஜிப்ஸி ட்ரைலர்

ரசிகர்கள் மனதை தொட்ட திரைப்படங்களான குக்கூ, ஜோக்கர் போன்ற தரமான படங்களைக் கொடுத்துத் தன்னைத் திறமையான இயக்குனர் என்று நிரூபித்துவிட்டார் இயக்குனர் திரு.ராஜூ முருகன் அவர்கள். இயக்குனர் என்பதைத் தாண்டி தான் ஓர் எழுத்தாளர் என்பதையும் தன்னுடைய புத்தகங்கள் மூலம் நிரூபித்தார். இவரது அடுத்த படத்தை பற்றி பலரும் எதிர்ப்பார்த்திருந்த நேரத்தில் நடிகர் ஜீவாவுடன் அமைந்தது ஜிப்ஸி திரைப்படம். இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டீசர் சமூக வலைத்தளங்களில் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படம் இனம், மொழி, காதல் மற்றும் அரிசயல் பேசும் படமாக இருக்கும் என இயக்குனர் ராஜு முருகன் பேட்டியளித்துள்ளார்.

மேலும் இந்த படத்தின் புதிய பிரத்தியேக ட்ரைலர் தற்பொழுது வெளியாகியுள்ளது. பிரபல தயாரிப்பு நிறுவனமான ஒலிம்பியா மூவிஸ் இந்த படத்தை தயாரித்துள்ளது. இயக்குனர் ராஜு முருகனின் முதல் படமான குக்கூ படத்திற்கு இசையமைத்து ரசிகர்களை மெலடி இசையில் மூழ்கவைத்த இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார். நடிகை நடாஷா இந்த படத்தில் அறிமுகமாகிறார். மலையாள இயக்குனர் திரு.லால் ஜோஷ் இந்த படத்தில் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். மேலும் மற்றொரு மலையாள நடிகரான சன்னி வேயின் ஒரு முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.

படத்தின் விறுவிறுப்பான ட்ரைலர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது. சமகால இந்திய அரசியல், தமிழ் மொழியை பற்றிய அரசியல், மக்களின் போராட்டம் போன்ற பல விஷயங்களை முன்னெடுத்து காட்டுகிறது ஜிப்ஸி ட்ரைலர். ஒரு குரலை அடக்கவேண்டும் என்று நீங்கள் நினைத்தால், ஓராயிரம் குரல்கள் வெடிக்கும், அப்பாவி உயிர்களை எடுத்தால், திருப்பி அடிப்போம், தேவைப்பட்டால் உயிரையும் எடுத்து புரிய வைப்போம் போன்ற வசனங்கள் ட்ரைலரில் அதிகப்படியான கவனத்தை ஈர்க்கின்றன. படத்தின் ஒளிப்பதிவாளர் யார் என்று தேடும் அளவிற்கு ஒளிப்பதியில் புதிய சாதனையை படைத்துள்ளார் படத்தின் ஒளிப்பதிவாளர் செல்வகுமார் அவர்கள். ட்ரைலரில் வரும் சில காட்சிகள் பார்க்கும்பொழுது படத்தை நிச்சையம் திரையரங்கத்தில் தான் பார்க்கவேண்டும் என்ற ஆர்வத்தை தூண்டுகிறது.

வெளியானது இனம், மொழி, காதல், பேசும் ஜிப்ஸி படத்தின் புதிய ட்ரைலர்