ads
KPY பாலா நடிக்கும் காந்தி கண்ணாடி திரைப்படம் வெற்றி அடையுமா ?
ராம் குமார் (Author) Published Date : Aug 29, 2025 18:22 ISTபொழுதுபோக்கு
இயக்குநர் ஷெரிஃப் இயக்கத்தில், நடிகர் பாலா கதாநாயகனாக அறிமுகமாகும் காந்தி கண்ணாடி திரைப்படம் வரும் செப்டம்பர் 5 ஆம் தேதி வெளியாகவுள்ளது. ஏற்கனவே வெளியான இப்படத்தின் டிரெய்லர் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ள நிலையில், சமீபத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பு (Press Meet ) பல சுவாரஸ்யமான தகவல்களை வெளிப்படுத்தியுள்ளது.
இந்த செய்தியாளர் சந்திப்பில் (Press Meet) , விஜய் டி.வி. மூலம் உயர்ந்து வந்த சிவகார்த்திகேயனைப் போல் நீங்களும் வெற்றி பெறுவீர்களா? என பாலாவிடம் செய்தியாளர் ஒருவர் கேள்வி எழுப்பினார். அதற்குப் பதிலளித்த பாலா, அவர் ஒரு மிகப்பெரிய இடத்தில் இருக்கிறார். அதேபோல நானும் வெற்றிபெற முடியும் என்று நம்புகிறேன் என அடக்கத்துடன் பதிலளித்தார்.
மேலும், படத்தின் இயக்குநர் ஷெரிஃப் ஒரு முக்கிய தகவலைப் பகிர்ந்து கொண்டார். "இந்தப் படத்திற்காக சுமார் 50 கதாநாயகிகளை அணுகினோம். ஆனால், நடிகர் பாலா தான் கதாநாயகன் என்று தெரிந்ததும், பலரும் நடிக்க மறுத்துவிட்டனர்" என்று அவர் தெரிவித்தார்.
இத்தகைய சவால்களையும், எதிர்மறையான கருத்துகளையும் கடந்து, நடிகர் பாலாவின் முதல் படமான காந்தி கண்ணாடி வெற்றி பெறுமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.