கேம் ஓவர் படம் தமிழ் ராக்கர்ஸ் இணையத்தில் லீக்கானது

கேம் ஓவர் படம்









டாப்சீ நடிப்பில் இயக்குனர் அஸ்வின் சரவணன் இயக்கத்தில் வெளியாகியுள்ள கேம் ஓவர் திரைப்படம் தமிழ், தெலுங்கு மற்றும் ஹிந்தியில் உலகம் முழுவதும் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. திகில் திரைப்படமாக எடுக்கப்பட்டுள்ள கேம் ஓவர் ரசிகர்களிடம் நல்ல விமர்சனத்தை பெற்று வரும் நிலையில் படம் தமிழ்ராக்கர்ஸ் இணையத்தளத்தில் லீக் ஆகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

https://youtu.be/JUswBxwJvaQ

இரண்டு நாட்கள் முன்பே பிரத்யேகமாக குறிப்பிட்ட திரையுலக மற்றும் ஊடக பிரமுகர்களுக்கு திரையிடப்பட்டு  நல்ல விமர்சனங்களை பெற்றது. வெளியாகும் முன்னே இணையம் மற்றும் சமூக வலைத்தளத்தில் நல்ல விமர்சனங்களுடன் களமிறங்கிய கேம் ஓவர் தற்போது அதே வேகத்தில் இணையத்திலும் லீக்காகி தயாரிப்பாளர்களுக்கு தலைவலியை ஏற்படுத்தியுள்ளது.

இதுபோன்ற நல்ல திரைப்படங்களை இயக்கும் வாய்ப்பு கிடைப்பது மிகவும் அரிது. இயக்குனர் இந்த படத்தை வேறு எந்த ஒரு படம் சாயலிலும் இல்லாமல் இருக்க முயறிச்சி எடுத்து வெற்றி பெற வைப்பது கடினமான ஒன்று. இவ்வாறு எடுக்கும் நல்ல படங்கள் திருட்டுத்தனமாக இணையத்தில் வெளியாவது, அனைத்து உழைப்புகளையும் பயன் இல்லாமல் போகின்றது.


Share on:

Latest Post