கடைசி எச்சரிக்கை மூலம் உலக அழிவை உணர்த்தும் டவுட் செந்தில்


சொல்லுங்கள் டாடி சொல்லுங்கள் நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர் டவுட் செந்தில். இதன் பிறகு தமிழ் சினிமாவில் பிருந்தாவனம், உப்பு கருவாடு போன்ற படங்களில் நடித்துள்ளார். இவருடைய நடிப்பில் தற்போது 'கடைசி எச்சரிக்கை' என்ற குறும்படம் ஒன்று உருவாகி வருகின்றது. இந்த படம் உலக அழிவு பற்றிய விழிப்புணர்வு படமாக உருவாகி வருகின்றது.
இந்த படத்தின் டீசரை சமீபத்தில் தயாரிப்பாளர் கலைப்புலி எஸ் தாணு வெளியிட்டுள்ளார். இந்த படம் சுகுமார் கணேசன் என்பவரின் எழுத்து மற்றும் இயக்கத்தில் உருவாகி வருகிறது. மழைநீரை பெய்யும் போது அதனை சேமிக்காமல், கடலுக்குள் சேர விட்டு, பின்பு ஐயோ தண்ணீர் இல்லையே என்று புலம்பும் நம்மை திருத்த புதுவித முயற்சியை இயக்குனர் சுகுமார் கணேசன் கையாண்டு வருகிறார். இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் டீசர் போன்றவை தற்போது வெளியாகியுள்ளது.